28. (நபியே!) கூறுவீராக: என்னையும், என்னுடன் இருப்பவர்களையும் (நீங்கள் விரும்புகிறபடி) அல்லாஹ் அழித்து விட்டாலும் அல்லது அவன் எங்களுக்கு அருள் புரிந்தாலும் (அது எங்கள் விஷயம். ஆயினும்,) துன்புறுத்தும் வேதனையிலிருந்து நிராகரிக்கும் உங்களை பாதுகாப்பவர் யார் என்பதை(க் கவனித்து)ப் பார்த்தீர்களா?
الترجمة التاميلية
قُلۡ أَرَءَيۡتُمۡ إِنۡ أَهۡلَكَنِيَ ٱللَّهُ وَمَن مَّعِيَ أَوۡ رَحِمَنَا فَمَن يُجِيرُ ٱلۡكَٰفِرِينَ مِنۡ عَذَابٍ أَلِيمٖ
கூறுவீராக: அல்லாஹ், என்னையும் என்னுடன் இருப்பவர்களையும் (நீங்கள் ஆசிப்பது போல்) அழித்து விட்டாலும், அல்லது (நாங்கள் நம்புவது போல்) அவன் எங்கள் மீது கிருபை புரிந்தாலும், நோவினை செய்யும் வேதனையை விட்டு, காஃபிர்களைக் காப்பவர் யார் என்பதை கவனித்தீர்களா?
Jan Trust Foundation - Tamil translation
(நபியே!) கூறுவீராக! “அல்லாஹ் என்னையும் என்னுடன் இருப்பவர்களையும் அழித்துவிட்டால் அல்லது அவன் எங்கள் மீது கருணை புரிந்(து இன்னும் சில காலம் வாழவைத்)தால், (அது அவனது திட்டத்தின் படி அவன் செய்வதாகும்.) வலி தரக்கூடிய தண்டனையில் இருந்து நிராகரிப்பாளர்களை யார் காப்பாற்றுவார்? (நாங்கள் வாழ்வதும் மரணிப்பதும் உங்களை வேதனையில் இருந்து காப்பாற்றிவிடுமா?)” என்று அறிவியுங்கள்.
الترجمة التاميلية - عمر شريف