29. (நபியே!) கூறுவீராக: ‘‘அவன்தான் ரஹ்மான். அவனையே நாங்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறோம். அவனையே நாங்கள் நம்பியும் இருக்கிறோம். ஆகவே, பகிரங்கமான வழிகேட்டில் இருப்பவர்கள் யாரென்பதை அதிசீக்கிரத்தில் நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.''
الترجمة التاميلية
قُلۡ هُوَ ٱلرَّحۡمَٰنُ ءَامَنَّا بِهِۦ وَعَلَيۡهِ تَوَكَّلۡنَاۖ فَسَتَعۡلَمُونَ مَنۡ هُوَ فِي ضَلَٰلٖ مُّبِينٖ
(நபியே!) நீர் கூறும்: (எங்களைக் காப்பவன்) அவனே - அர்ரஹ்மான், அவன் மீதே நாங்கள் ஈமாக் கொண்டோம், மேலும் அவனையே முற்றிலும் சார்ந்திருக்கிறோம் - எனவே, வெகு சீக்கிரத்தில் பகிரங்கமான வழி கேட்டிலிருப்பவர் யார் என்பதை நீங்கள் அறிவீர்கள்!"
Jan Trust Foundation - Tamil translation
(நபியே!) கூறுவீராக! அவன்தான் ரஹ்மான் (-அளவற்ற அருளாளன்). அவனை நாங்கள் நம்பிக்கை கொண்டோம். அவன் மீதே நாங்கள் “தவக்குல்” நம்பிக்கை வைத்தோம். தெளிவான வழிகேட்டில் உள்ளவர்களை விரைவில் அறிவீர்கள்.
الترجمة التاميلية - عمر شريف