3. அவனே ஏழு வானங்களையும் அடுக்கடுக்காகப் படைத்தவன். (மனிதனே!) அந்த ரஹ்மானுடைய படைப்பில் நீ ஒரு ஒழுங்கீனத்தையும் காணமாட்டாய். மற்றொரு முறை (அதைக் கவனித்துப்)பார். அதில் ஒரு பிளவை நீ காண்கிறாயா?
الترجمة التاميلية
ٱلَّذِي خَلَقَ سَبۡعَ سَمَٰوَٰتٖ طِبَاقٗاۖ مَّا تَرَىٰ فِي خَلۡقِ ٱلرَّحۡمَٰنِ مِن تَفَٰوُتٖۖ فَٱرۡجِعِ ٱلۡبَصَرَ هَلۡ تَرَىٰ مِن فُطُورٖ
அவனே ஏழு வானங்களையும் அடுக்கடுக்காக படைத்தான்; (மனிதனே) அர்ரஹ்மானின் படைப்பில் குறையை நீர் காணமாட்டீர், பின்னும் (ஒரு முறை) பார்வையை மீட்டிப்பார்! (அவ்வானங்களில்) ஏதாவது ஓர் பிளவை காண்கிறாயா?
Jan Trust Foundation - Tamil translation
அவன் ஏழு வானங்களை அடுக்கடுக்காகப் படைத்தான். ரஹ்மானின் படைப்பில் எவ்வித ஏற்றத் தாழ்வையும் நீர் பார்ப்பதில்லை. பார்வையை நீர் மீண்டும் திருப்புவீராக! ஏதாவது பிளவுகளை (விரிசல்களை) நீர் (வானத்தில்) பார்க்கிறீரா?
الترجمة التاميلية - عمر شريف