9. அதற்கவர்கள் ‘‘மெய்தான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் தூதர் நிச்சயமாக எங்களிடம் வந்தார். எனினும், நாங்கள் (அவரைப்) பொய்யாக்கி, அல்லாஹ் (உங்கள் மீது) எதையும் இறக்கிவைக்கவே இல்லை. நீங்கள் பெரும் வழிகேட்டிலே தவிர இருக்கவில்லை என்று (அவர்களை நோக்கி) நாங்கள் கூறினோம்'' என்று கூறுவார்கள்.
الترجمة التاميلية
قَالُواْ بَلَىٰ قَدۡ جَآءَنَا نَذِيرٞ فَكَذَّبۡنَا وَقُلۡنَا مَا نَزَّلَ ٱللَّهُ مِن شَيۡءٍ إِنۡ أَنتُمۡ إِلَّا فِي ضَلَٰلٖ كَبِيرٖ
அதற்கவர்கள் கூறுவார்கள்; "ஆம்! அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் திட்டமாக எங்களிடம் வந்தார், ஆனால் நாங்கள் (அவரைப்) பொய்ப்பித்து, 'அல்லாஹ் யாதொன்றையும் இறக்கவில்லை, நீங்கள் பெரும் வழிகேட்டில் அல்லாமல் வேறில்லை" என்று சொன்னோம்."
Jan Trust Foundation - Tamil translation
அவர்கள் கூறுவார்கள்: “ஏன் வரவில்லை, திட்டமாக எங்களிடம் எச்சரிப்பாளர் வந்தார். ஆனால், நாங்கள் (அவரை) பொய்ப்பித்தோம். அல்லாஹ் எதையும் இறக்கவில்லை. (தூதர்களே!) நீங்கள் பெரிய வழிகேட்டிலேயே தவிர (நேர்வழியில்) இல்லை”என்று நாங்கள் கூறினோம்.”
الترجمة التاميلية - عمر شريف