39. (எனினும், அதில்) அவன் நாடியதை அழித்து விடுவான்; (அவன் நாடியதை) உறுதியாக்கிவிடுவான். (அனைத்திற்கும்) அசல் பதிவு அவனிடத்தில் இருக்கிறது. (அதன்படி எல்லாக் காரியங்களும் தவறாது நடைபெறும்.)
الترجمة التاميلية
يَمۡحُواْ ٱللَّهُ مَا يَشَآءُ وَيُثۡبِتُۖ وَعِندَهُۥٓ أُمُّ ٱلۡكِتَٰبِ
(எனினும்,) தான் நாடியதை (அதிலிருந்து) அல்லாஹ் அழித்து விடுவான். (தான் நாடியதை அதில்) நிலைத்திருக்கவும் செய்வான் - அவனிடத்திலேயே உம்முல் கிதாப் (மூலப் பதிவேடும்) இருக்கறது.
Jan Trust Foundation - Tamil translation
(அதில்) அவன் நாடியதை (தவணை வந்தவுடன் நிகழ்த்தி முடித்து) அழிக்கிறான்; (அவன் நாடியதை தவணை வரை) தரிபடுத்துகிறான். அவனிடம் தான் தாய் புத்தகம் இருக்கிறது.
الترجمة التاميلية - عمر شريف