10. மூஸாவுடைய தாயின் உள்ளம் (அவரை ஆற்றில் எறிந்த பின் துக்கத்தால்) வெறுமையாகி விட்டது. அவள் நமது வார்த்தையை நம்பும்படி அவளுடைய உள்ளத்தை நாம் உறுதிப்படுத்தியிருக்காவிட்டால், (மூஸா பிறந்திருக்கும்) விஷயத்தை அனைவருக்கும் அவள் வெளிப்படுத்தியே இருப்பாள்.
الترجمة التاميلية
وَأَصۡبَحَ فُؤَادُ أُمِّ مُوسَىٰ فَٰرِغًاۖ إِن كَادَتۡ لَتُبۡدِي بِهِۦ لَوۡلَآ أَن رَّبَطۡنَا عَلَىٰ قَلۡبِهَا لِتَكُونَ مِنَ ٱلۡمُؤۡمِنِينَ
மூஸாவின் தாயுடைய இருதயம் (துக்கத்தால்) வெறுமையாகி விட்டது முஃமின்களில் நின்றுமுள்ளவளாய் இருப்பதற்காக நாம் அவள் உள்ளத்தை உறுதிப்படுத்தாது இருந்திருந்தால், அவள் (மூஸா ஆற்றில் விடப்பட்டதை) வெளிப்படுத்த முடுகியிருப்பாள்.
Jan Trust Foundation - Tamil translation
மூசாவின் தாயாருடைய உள்ளம் (மூசாவின் நினைவைத் தவிர மற்ற அனைத்திலிருந்தும்) வெறுமையாக ஆகிவிட்டது. அவள் நம்பிக்கையாளர்களில் ஆகவேண்டும் என்பதற்காக அவளுடைய உள்ளத்தை நாம் உறுதிப்படுத்தவில்லையெனில் நிச்சயமாக அவள் அவரை (-மூஸாவை) வெளிப்படுத்தி இருக்கக்கூடும்.
الترجمة التاميلية - عمر شريف