11. (அக்குழந்தையைப் பேழையில் வைத்து ஆற்றில் விட்டதன் பின்னர்) அவள், அக்குழந்தையின் சகோதரியை நோக்கி ‘‘ (ஆற்றில் மிதந்து செல்லும்) அதைப் பின்தொடர்ந்து நீயும் செல்'' என்று கூறினாள். அவளும் அ(தனைப் பின்தொடர்ந்து சென்று அதை எடுத்த)வர்களுக்குத் தெரியாத விதத்தில் அதை(ப் பற்றி என்ன நடக்கிறதென்று) தூரத்திலிருந்தே கவனித்து வந்தாள்.
الترجمة التاميلية
وَقَالَتۡ لِأُخۡتِهِۦ قُصِّيهِۖ فَبَصُرَتۡ بِهِۦ عَن جُنُبٖ وَهُمۡ لَا يَشۡعُرُونَ
இன்னும் மூஸாவின் சகோதரியிடம்; "அவரை நீ பின் தொடர்ந்து செல்" என்றும் (தாய்) கூறினாள். (அவ்வாறே சென்று ஃபிர்அவ்னின்) ஆட்கள் காண முடியாதபடி அவள் தூரத்திலிருந்து அவதை கவனித்து வந்தாள்.
Jan Trust Foundation - Tamil translation
அவள் (-மூசாவின் தாயார்) அவருடைய சகோதரிக்கு “நீ அவரைப் பின்தொடர்ந்து செல்” என்று கூறினாள். ஆக, அவள் அவரை தூரத்திலிருந்து பார்த்துவிட்டாள். எனினும், அவர்கள் (-ஃபிர்அவ்னின் குடும்பத்தார் இவள் அவருடைய சகோதரி என்பதை) உணரவில்லை.
الترجمة التاميلية - عمر شريف