32. உமது சட்டைப் பையில் உமது கையைப் புகுத்துவீராக. அது மாசற்ற பிரகாசமுள்ள வெண்மையாக வெளிப்படும். நீர் பயப்படாதிருக்கும் பொருட்டு உமது கைகளை உமது விலாவில் சேர்த்துக் கொள்வீராக. ஃபிர்அவ்னிடமும் அவனுடைய தலைவர்களிடமும் நீர் செல்லும் பொருட்டு இவ்விரண்டும் உமது இறைவனால் உமக்கு அளிக்கப்பட்ட இரு அத்தாட்சிகளாகும். நிச்சயமாக அவர்கள் பாவம் செய்யும் மக்களாக இருக்கிறார்கள்'' (என்று அவருக்குக் கூறப்பட்டது).
الترجمة التاميلية
ٱسۡلُكۡ يَدَكَ فِي جَيۡبِكَ تَخۡرُجۡ بَيۡضَآءَ مِنۡ غَيۡرِ سُوٓءٖ وَٱضۡمُمۡ إِلَيۡكَ جَنَاحَكَ مِنَ ٱلرَّهۡبِۖ فَذَٰنِكَ بُرۡهَٰنَانِ مِن رَّبِّكَ إِلَىٰ فِرۡعَوۡنَ وَمَلَإِيْهِۦٓۚ إِنَّهُمۡ كَانُواْ قَوۡمٗا فَٰسِقِينَ
உம் கையை உம் சட்டைக்குள் புகுத்தும்; அது ஒளி மிக்கதாய், மாசற்ற வெண்மையாக வெளிவரும்; இன்னும், நீர் அச்சப்படுங்காலை உம்முடைய கைகளை உம் விலாவில் சேர்த்துக் கொள்ளுங்கள் - இவ்விரண்டும் ஃபிர்அவ்னுக்கும், அவனுடைய பிரதானிகளுக்கும் உரிய, உம் இறைவனால் அளிக்கப்பட்ட இரு அத்தாட்சிகளாகும்; நிச்சயமாக அவர்கள் பாவம் செய்யும் சமூகத்தாராகவே இருக்கின்றார்கள்" (என்றும் அவருக்கு கூறப்பட்டது).
Jan Trust Foundation - Tamil translation
“உமது கையை உமது சட்டைப் பையில் நுழைப்பீராக! அது குறை இன்றி (மின்னும்) வெண்மையாக வெளிவரும். (பாம்பைப் பார்த்து நீர்) பயந்து விட்டதால் உமது கையை உம்முடன் அணைப்பீராக! (அந்த பயம் போய்விடும்.) ஆக, இவை இரண்டும் உமது இறைவன் புறத்திலிருந்து ஃபிர்அவ்ன் இன்னும் அவனது பிரமுகர்கள் பக்கம் (நீர் நபியாக செல்வதற்குரிய) இரண்டு அத்தாட்சிகளாகும். நிச்சயமாக அவர்கள் பாவிகளான மக்களாக இருக்கின்றனர்.” (இவ்வாறு அல்லாஹ் மூசாவிடம் கூறினான்.)
الترجمة التاميلية - عمر شريف