48. எனினும், இத்தகைய உண்மை (விஷயங்களையுடைய சத்திய வேதம்) நம்மிடமிருந்து இவர்களிடம் வந்த சமயத்தில் (இதை நம்பிக்கை கொள்வதற்குப் பதிலாக) இவர்கள் ‘‘ மூஸாவுக்கு கொடுக்கப்பட்ட அற்புதங்களைப் போல் இவருக்கும் கொடுக்கப்பட வேண்டாமா?'' என்று கூறுகின்றனர். (என்னே!) இதற்கு முன்னர் மூஸாவுக்குக் கொடுக்கப்பட்ட அற்புதங்களையும் இவர்(களின் மூதாதை)கள் நிராகரித்து விடவில்லையா? ‘‘ (மூஸாவும், ஹாரூனும்) ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்ளும் சூனியக்காரர்கள் என்று இவர்கள் கூறியதுடன், நிச்சயமாக நாங்கள் இவ்விருவரையும் நிராகரித்து விட்டோம்'' என்றும் கூறினார்கள்.
الترجمة التاميلية
فَلَمَّا جَآءَهُمُ ٱلۡحَقُّ مِنۡ عِندِنَا قَالُواْ لَوۡلَآ أُوتِيَ مِثۡلَ مَآ أُوتِيَ مُوسَىٰٓۚ أَوَلَمۡ يَكۡفُرُواْ بِمَآ أُوتِيَ مُوسَىٰ مِن قَبۡلُۖ قَالُواْ سِحۡرَانِ تَظَٰهَرَا وَقَالُوٓاْ إِنَّا بِكُلّٖ كَٰفِرُونَ
எனினும் (இப்பொழுது) நம்மிடமிருந்து சத்திய(மார்க்க)ம் அவர்களிடம் வந்த போது, "மூஸாவுக்குக் கொடுக்கப்பட்டது போன்று இவருக்கு ஏன் கொடுக்கப்படவில்லை" என்று கேட்கிறார்கள்; இதற்கு முன்னர், மூஸாவுக்குக் கொடுக்கப்பட்டதையும் அவர்(களின் மூதாதையர்)கள் நிராகரிக்க வில்லையா? இன்னும் அவர்கள் கூறுகிறார்கள்; (திருக் குர்ஆனும், தவ்ராத்தும்) "ஒன்றையொன்று உறுதிப்படுத்தும் இரண்டு சூனிய(மந்திர)ங்களே!" என்று இன்னும் அவர்கள் கூறுகிறார்கள்; "நிச்சயமாக நாங்கள் (இவை) அனைத்தையும் நிராகரிக்கிறோம்" என்று.
Jan Trust Foundation - Tamil translation
நம்மிடமிருந்து சத்திய தூதர் அவர்களுக்கு வந்தபோது, “அவர் (-அந்த தூதர்) மூசாவிற்கு வழங்கப்பட்டதை (-மூஸாவின் வேதம்) போன்ற (வேதம் அவருக்கும்) வழங்கப்பட்டிருக்க வேண்டாமா! என்று கூறினர். இதற்கு முன்னர் மூசாவிற்கு வழங்கப்பட்டதை இவர்கள் (-இந்த யூதர்கள்) மறுக்கவில்லையா? அவர்கள் (அந்த யூதர்கள்) கூறினர்: (மூசாவின் வேதமும் ஈசாவின் வேதமும் இவை இரண்டும்) தங்களுக்குள் உதவி செய்த இரண்டு சூனியங்களாகும். (உமக்கு வேதம் வழங்கப்பட்ட பின்னர்) அவர்கள் கூறினர்: “நிச்சயமாக நாங்கள் (மூசா, ஈசா, முஹம்மது ஆகியோரின் வேதங்கள்) அனைத்தையும் மறுப்பவர்கள்தான்.
الترجمة التاميلية - عمر شريف