45. ஆகவே, அவர்கள் செய்த சூழ்ச்சிகளின் தீங்குகளிலிருந்து அவரை அல்லாஹ் காப்பாற்றினான். ஃபிர்அவ்னுடைய மக்களைக் கடினமான வேதனை சூழ்ந்துகொண்டது.
الترجمة التاميلية
فَوَقَىٰهُ ٱللَّهُ سَيِّـَٔاتِ مَا مَكَرُواْۖ وَحَاقَ بِـَٔالِ فِرۡعَوۡنَ سُوٓءُ ٱلۡعَذَابِ
ஆகவே, அவர்கள் திட்டமிட்ட தீமைகளை விட்டும் அல்லாஹ் அவரைக் காத்துக் கொண்டான். மேலும் வேதனையின் கேடு ஃபிர்அவ்னின் கூட்டத்தாரைச் சூழ்ந்து கொண்டது.
Jan Trust Foundation - Tamil translation
ஆக, அவர்கள் செய்த சூழ்ச்சிகளின் தீங்குகளை விட்டு அவரை அல்லாஹ் பாதுகாத்தான். ஃபிர்அவ்னின் குடும்பத்தார்களை கெட்ட வேதனை சூழ்ந்துகொண்டது.
الترجمة التاميلية - عمر شريف