50. அதற்கவர்கள் (இவர்களை நோக்கி) ‘‘உங்களிடம் வந்த (இறைவனுடைய) தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளுடன் உங்களிடம் வரவில்லையா?'' என்று கேட்பார்கள். அதற்கு இவர்கள் ‘‘ஆம்! மெய்தான் (வந்தார்கள்)'' என்று கூறுவார்கள். அதற்கவர்கள், ‘‘அவ்வாறாயின், (நாங்கள் இறைவனிடம் கேட்பதற்கில்லை.) நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்'' என்று கூறிவிடுவார்கள். இந்நிராகரிப்பவர்களின் பிரார்த்தனை ஒரு பயனும் அளிக்காது.
الترجمة التاميلية
قَالُوٓاْ أَوَلَمۡ تَكُ تَأۡتِيكُمۡ رُسُلُكُم بِٱلۡبَيِّنَٰتِۖ قَالُواْ بَلَىٰۚ قَالُواْ فَٱدۡعُواْۗ وَمَا دُعَـٰٓؤُاْ ٱلۡكَٰفِرِينَ إِلَّا فِي ضَلَٰلٍ
"உங்கள் ரஸூல்கள் (தூதர்கள்) உங்களிடம் தெளிவான அத்தாட்சிகளுடன் வரவில்லையா?" என (அக்காவலாளிகள்) கேட்பார்கள். "ஆம்! நிச்சயமாக" என அவர்கள் பதில் கூறுவார்கள். "அவ்வாறாயின் நீங்களே பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்" என்று அவர்கள் கூறுவர். ஆனால் காஃபிர்களின் பிரார்த்தனை வழி கேட்டிலில்லாமல் இல்லை.
Jan Trust Foundation - Tamil translation
அவர்கள் கூறுவார்கள்: தெளிவான அத்தாட்சிகளுடன் உங்களிடம் உங்கள் தூதர்கள் வந்திருக்கவில்லையா? அவர்கள் (பதில்) கூறுவார்கள்: ஏன் வரவில்லை! (கண்டிப்பாக வந்தார்கள்.) அவர்கள் கூறுவார்கள்: (உங்கள் அனைவருக்கும்) நீங்கள் பிரார்த்தனை கேளுங்கள். காஃபிர்களின் பிரார்த்தனை வழிகேட்டில் தவிர இல்லை.
الترجمة التاميلية - عمر شريف