8. ‘‘எங்கள் இறைவனே! நீ இவர்களுக்கு வாக்களித்திருக்கும் நிலையான சொர்க்கங்களில் இவர்களையும் இவர்களுடைய மூதாதைகள், இவர்களுடைய மனைவிகள், இவர்களுடைய சந்ததிகள் ஆகிய இவர்களில் உள்ள நல்லவர்களையும் புகுத்துவாயாக! நிச்சயமாக நீதான் (அனைவரையும்) மிகைத்தவன், (அனைத்தையும் அறிந்த) ஞானமுடையவன்'' என்றும்,
الترجمة التاميلية
رَبَّنَا وَأَدۡخِلۡهُمۡ جَنَّـٰتِ عَدۡنٍ ٱلَّتِي وَعَدتَّهُمۡ وَمَن صَلَحَ مِنۡ ءَابَآئِهِمۡ وَأَزۡوَٰجِهِمۡ وَذُرِّيَّـٰتِهِمۡۚ إِنَّكَ أَنتَ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ
"எங்கள் இறைவனே! நீ அவர்களுக்கு வாக்களித்திருக்கும், நிலையான சுவர்க்கத்தில், அவர்களையும், அவர்கள் மூதாதையர்களிலும், அவர்கள் மனைவியர்களிலும், அவர்கள் சந்ததியார்களிலும் நன்மை செய்தோரையும் பிரவேசிக்கச் செய்வாயாக. நிச்சயமாக நீ தான் (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்.
Jan Trust Foundation - Tamil translation
எங்கள் இறைவா! இன்னும் அவர்களை அத்ன் சொர்க்கங்களில் நுழைப்பாயாக! அதை நீ அவர்களுக்கு வாக்களித்திருக்கின்றாய். இன்னும் அவர்களின் பெற்றோர்கள், அவர்களின் மனைவிகள், அவர்களின் சந்ததிகளில் நல்லவர்களாக இருந்தவர்களையும் (சொர்க்கங்களில் நுழைப்பாயாக)! நிச்சயமாக நீதான் மிகைத்தவன், மகா ஞானவான்.
الترجمة التاميلية - عمر شريف