29. (நபியே!) இந்த குர்ஆனைக் கேட்கும் பொருட்டு, ஜின்களில் சிலரை நாம் உம்மிடம் வருமாறு செய்து, அவர்கள் வந்த சமயத்தில் (அவர்கள் தங்கள் மக்களை நோக்கி) ‘‘நீங்கள் வாய் பொத்தி (இதைக் கேட்டுக்கொண்டு) இருங்கள்'' என்று கூறினார்கள். (இது) ஓதி முடிவு பெறவே, தங்கள் இனத்தார்களிடம் சென்று அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்ய முற்பட்டனர்.
الترجمة التاميلية
وَإِذۡ صَرَفۡنَآ إِلَيۡكَ نَفَرٗا مِّنَ ٱلۡجِنِّ يَسۡتَمِعُونَ ٱلۡقُرۡءَانَ فَلَمَّا حَضَرُوهُ قَالُوٓاْ أَنصِتُواْۖ فَلَمَّا قُضِيَ وَلَّوۡاْ إِلَىٰ قَوۡمِهِم مُّنذِرِينَ
மேலும் (நபியே!) நாம் உம்மிடம் இந்த குர்ஆனை செவியுறும் பொருட்டு ஜின்களில் சிலரை திருப்பியதும், அவர்கள் அங்கு வந்த போது, "மெளனமாக இருங்கள்" என்று (மற்றவர்களுக்குச்) சொன்னார்கள்; (ஓதுதல்) முடிந்ததும் தம் இனத்தாரிடம் சென்று அவர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்தனர்.
Jan Trust Foundation - Tamil translation
ஜின்களின் சில நபர்களை உம் பக்கம் நாம் திருப்பிய சமயத்தை நினைவு கூர்வீராக! அவர்கள் (நீர் ஓதுகின்ற) குர்ஆனை செவிமடுக்கின்றனர். அவர்கள் அந்த இடத்திற்கு வந்த போது, வாய்மூடி இருங்கள்! என்று (தங்களுக்குள்) கூறினார்கள். (குர்ஆன் ஓதி) முடிக்கப்பட்ட போது அவர்கள் தங்களது சமுதாயத்தினர் பக்கம் (அவர்களை) எச்சரிப்பவர்களாகத் திரும்பினார்கள்.
الترجمة التاميلية - عمر شريف