11. இதன் காரணமாவது :நிச்சயமாக நம்பிக்கை கொண்டவர்களை காப்பவனாக அல்லாஹ்வே இருக்கிறான். நிராகரிப்பவர்களுக்கோ, நிச்சயமாக ஒரு பாதுகாவலனுமில்லை.
الترجمة التاميلية
ذَٰلِكَ بِأَنَّ ٱللَّهَ مَوۡلَى ٱلَّذِينَ ءَامَنُواْ وَأَنَّ ٱلۡكَٰفِرِينَ لَا مَوۡلَىٰ لَهُمۡ
இது ஏனெனில்; அல்லாஹ் ஈமான் கொண்டவர்களுக்கு பாது காவலனாக இருக்கிறான்; அன்றியும் காஃபிர்களுக்குப் பாதுகாவலர் எவரும் இல்லை என்பதனால்தான்.
Jan Trust Foundation - Tamil translation
அது (-நம்பிக்கையாளர்கள், நிராகரிப்பாளர்கள் ஆகிய இரு சாராருக்கும் அவரவர்களுக்குத் தகுதியானதை அல்லாஹ் செய்தது) ஏனெனில், நிச்சயமாக அல்லாஹ்தான் நம்பிக்கையாளர்களின் எஜமானன் (உதவியாளன்) ஆவான். இன்னும் நிச்சயமாக நிராகரிப்பாளர்கள் -அவர்களுக்கு எஜமானன் (உதவியாளன்) இல்லை.
الترجمة التاميلية - عمر شريف