13. (நபியே!) உமது ஊரைவிட்டும் உம்மை வெளிப்படுத்திய இவர்களைவிட எத்தனையோ ஊரார்கள் மிக்க பலசாலிகளாக இருந்தனர். (அவர்கள் செய்த அநியாயத்தின் காரணமாக) அவர்கள் அனைவரையும் நாம் அழித்து விட்டோம். (அச்சமயம்) அவர்களுக்கு உதவி செய்பவர்கள் ஒருவரும் இருக்கவில்லை. (ஆகவே, இவர்கள் எம்மாத்திரம்! இவர்களையும் நாம் அழித்தே தீருவோம்.)
الترجمة التاميلية
وَكَأَيِّن مِّن قَرۡيَةٍ هِيَ أَشَدُّ قُوَّةٗ مِّن قَرۡيَتِكَ ٱلَّتِيٓ أَخۡرَجَتۡكَ أَهۡلَكۡنَٰهُمۡ فَلَا نَاصِرَ لَهُمۡ
மேலும், (நபியே!) உம்முடைய ஊரை விடடு உம்மை வெளியேற்றியவர்களை விட, எத்தனையோ ஊ(ரா)ர்கள் மிக்க பல முடையவர்களாக இருந்தார்கள். (அவர்கள் பாவத்தின் காரணமாக) அவர்களை நாம் அழித்து விட்டோம் - ஆகவே அவர்களுக்கு உதவி செய்வோர் எவரும் இருக்கவில்லை.
Jan Trust Foundation - Tamil translation
உம்மை வெளியேற்றிய உமது ஊரை (-உமதூர் மக்களை) விட பலத்தால் மிக உறுதியான எத்தனையோ ஊர் மக்கள், நாம் அவர்களை அழித்தோம். அவர்களுக்கு (அப்போது) உதவியாளர் அறவே இல்லை.
الترجمة التاميلية - عمر شريف