2. எவர்கள், (அல்லாஹ்வை) நம்பிக்கைகொண்டு நற்செயல்களையும் செய்து, முஹம்மது (நபி (ஸல்)) அவர்கள் மீது இறைவனால் இறக்கப்பட்ட உண்மையான இவ்வேதத்தையும் நம்பிக்கை கொண்டிருந்தார்களோ, அவர்கள் (செய்த) பாவத்திற்கு இதைப் பரிகாரமாக்கி, அவர்களுடைய காரியங்களையும் அவன் சீர்படுத்தி விட்டான்.
الترجمة التاميلية
وَٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّـٰلِحَٰتِ وَءَامَنُواْ بِمَا نُزِّلَ عَلَىٰ مُحَمَّدٖ وَهُوَ ٱلۡحَقُّ مِن رَّبِّهِمۡ كَفَّرَ عَنۡهُمۡ سَيِّـَٔاتِهِمۡ وَأَصۡلَحَ بَالَهُمۡ
ஆனால், எவர்கள் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, முஹம்மது மீது இறக்கி அருளப்பட்ட (வேதத்)தின் மீது - இது அவர்களுடைய இறைவினிடமிருந்து (வந்து)ள்ள உண்மையாக இருக்கிறது என்று நம்பிக்கை கொள்கிறார்களோ, அவர்களுடைய தீமைகளை அவர்களை விட்டும் போக்கி, அவர்களுடை நிலையையும் சீராக்குகின்றான்.
Jan Trust Foundation - Tamil translation
எவர்கள் நம்பிக்கை கொண்டு, நன்மைகளை செய்து, முஹம்மது நபியின் மீது இறக்கப்பட்டதையும் நம்பிக்கை கொண்டார்களோ - அதுதான் (அவர் மீது இறக்கப்பட்ட அந்த வேதம்தான்) அவர்களின் இறைவனிடம் இருந்து (இறுதியாக) வந்த உண்மையாகும்- அவர்களின் பாவங்களை அவர்களை விட்டு அவன் போக்கி விடுவான்; அவர்களின் காரியத்தை அவன் சீர் செய்து விடுவான்.
الترجمة التاميلية - عمر شريف