52. (நபியே!) உள்ளங்களில் (நயவஞ்சக) நோய் உள்ளவர்கள் அவர்களிடம் (தோழமை கொள்ளவே) விரைந்து செல்வதை நீர் காண்பீர்! மேலும், ‘‘(நாங்கள் அவர்களை பகைத்துக் கொண்டால்) எங்களுக்கு ஓர் ஆபத்து ஏற்பட்டுவிடுமென்று நாங்கள் பயப்படுகிறோம்'' என்று அவர்கள் கூறுகின்றனர். அல்லாஹ் தன்னிடமிருந்து வெற்றியையோ அல்லது ஒரு (நற்)காரியத்தையோ (அதிசீக்கிரத்தில் உங்களுக்கு) அளிக்கக் கூடும். அது சமயம் அவர்கள் தங்கள் உள்ளங்களுக்குள் மறைத்து வைத்திருந்த (மோசமான என்னத்)தைப் பற்றி கவலை அடைவார்கள்.
الترجمة التاميلية
فَتَرَى ٱلَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٞ يُسَٰرِعُونَ فِيهِمۡ يَقُولُونَ نَخۡشَىٰٓ أَن تُصِيبَنَا دَآئِرَةٞۚ فَعَسَى ٱللَّهُ أَن يَأۡتِيَ بِٱلۡفَتۡحِ أَوۡ أَمۡرٖ مِّنۡ عِندِهِۦ فَيُصۡبِحُواْ عَلَىٰ مَآ أَسَرُّواْ فِيٓ أَنفُسِهِمۡ نَٰدِمِينَ
எனவே (நபியே!) எவர் இருதயங்களில் நோய் இருக்கின்றதோ, அத்தகையவர்தாம் அவர்களிடம் விரைந்து செல்வதை நீர் காண்பீர். (அவர்களைப் பகைத்துக் கொண்டால்) "எங்களுக்கு ஏதாவது துன்பச்சுழல் ஏற்படுமோ என்று அஞ்சுகிறோம்" என அவர்கள் கூறுகிறார்கள்; அல்லாஹ் (தான் நாடியபடி) தன்னிடமிருந்து (உங்களுக்கு) ஒரு வெற்றியையோ அல்லது ஏதாவது ஒரு (நற்) காரியத்தையோ கொடுத்து விடலாம்;. அப்பொழுது அவர்கள் தம் உள்ளங்களில் மறைத்து வைத்திருந்ததைப் பற்றி கைசேதமடைந்தோராக ஆகிவிடுவார்கள்.
Jan Trust Foundation - Tamil translation
(நபியே!) தங்கள் உள்ளங்களில் நோயுள்ளவர்கள் அவர்களில் (நட்புவைக்க) விரைபவர்களாகக் காண்பீர்! "ஆபத்து எங்களை அடைவதை பயப்படுகிறோம்'' என்று கூறுகின்றனர். அல்லாஹ் தன்னிடமிருந்து வெற்றி அல்லது வேறு ஒரு காரியத்தைக் கொண்டு வரலாம். (அது சமயம் அவர்கள்) தங்கள் உள்ளங்களில் மறைத்ததின் மீது துக்கப்பட்டவர்களாக ஆகிவிடுவார்கள்.
الترجمة التاميلية - عمر شريف