64. ‘‘அல்லாஹ்வுடைய கை கட்டப்பட்டிருக்கிறது'' என்று இந்த யூதர்கள் கூறுகின்றனர். (அவ்வாறன்று) அவர்களுடைய கைகள்தான் கட்டப்பட்டிருக்கின்றன. மேலும், இவ்வாறு அவர்கள் கூறியதன் காரணமாக அவர்கள் சபிக்கப்பட்டும் விட்டனர். மாறாக, அல்லாஹ்வுடைய இரு கைகளோ (எப்பொழுதும்) விரிந்தே இருக்கின்றன. அவன் விரும்பியவாறெல்லாம் (அள்ளி) அள்ளிக் கொடுக்கிறான். உமது இறைவனால் உமக்கு இறக்கப்பட்ட இவ்வேதம் அவர்களில் பெரும்பான்மையினருக்கு பொறாமையையும், நிராகரிப்பையுமே அதிகப்படுத்தி விடுகிறது. ஆகவே, நாம் அவர்களுக்கிடையில் பகைமையை, வெறுப்பை இறுதிநாள் வரை (இருக்கும்படி) விதைத்து விட்டோம். அவர்கள் (நம்பிக்கையாளர்களுக்கிடையில்) போர் நெருப்பை மூட்டும் போதெல்லாம் அல்லாஹ் அதை அணைத்து விடுகிறான். ஆனால், (இன்னும்) அவர்கள் பூமியில் விஷமம் செய்துகொண்டே அலைகிறார்கள். அல்லாஹ், விஷமம் செய்பவர்களை நேசிப்பதே இல்லை.
الترجمة التاميلية
وَقَالَتِ ٱلۡيَهُودُ يَدُ ٱللَّهِ مَغۡلُولَةٌۚ غُلَّتۡ أَيۡدِيهِمۡ وَلُعِنُواْ بِمَا قَالُواْۘ بَلۡ يَدَاهُ مَبۡسُوطَتَانِ يُنفِقُ كَيۡفَ يَشَآءُۚ وَلَيَزِيدَنَّ كَثِيرٗا مِّنۡهُم مَّآ أُنزِلَ إِلَيۡكَ مِن رَّبِّكَ طُغۡيَٰنٗا وَكُفۡرٗاۚ وَأَلۡقَيۡنَا بَيۡنَهُمُ ٱلۡعَدَٰوَةَ وَٱلۡبَغۡضَآءَ إِلَىٰ يَوۡمِ ٱلۡقِيَٰمَةِۚ كُلَّمَآ أَوۡقَدُواْ نَارٗا لِّلۡحَرۡبِ أَطۡفَأَهَا ٱللَّهُۚ وَيَسۡعَوۡنَ فِي ٱلۡأَرۡضِ فَسَادٗاۚ وَٱللَّهُ لَا يُحِبُّ ٱلۡمُفۡسِدِينَ
"அல்லாஹ்வின் கை கட்டப்பட்டிருக்கிறது" என்று யூதர்கள் கூறுகிறார்கள்;. அவர்களுடைய கைகள்தாம் கட்டப்பட்டுள்ளன. இவ்வாறு கூறியதின் காரணமாக அவர்கள் சபிக்கப்பட்டார்கள்;. அல்லாஹ்வின் இரு கைகளோ விரிக்கப்பட்டே இருக்கின்றன. தான் நாடியவாறு (தன் அருட்கொடைகளை) கொடுக்கிறான்; உம் மீது உம் இறைவனால் இறக்கப்பட்ட (இவ்வேதம்) அவர்கள் அநேகரில் வரம்பு மீறுதலையும் குஃப்ரை (நிராகரிப்பை)யும் நிச்சயமாக அதிகப் படுத்துகிறது, ஆகவே அவர்களிடையே பகைமையும், வெறுப்புணர்ச்சியையும் இறுதி நாள்வரை நாம் போட்டுவிட்டோம்;. அவர்கள் யுத்த நெருப்பை மூட்டும்போதெல்லாம் அதனை அல்லாஹ் அணைத்து விடுகிறான்;. (ஆயினும்) இன்னும் அவர்கள் பூமியில் குழப்பம் செய்து கொண்டே திரிகின்றனர். அல்லாஹ் குழப்பம் செய்பவர்களை நேசிக்க மாட்டான்.
Jan Trust Foundation - Tamil translation
"அல்லாஹ்வுடைய கை கட்டப்பட்டிருக்கிறது'' என்று யூதர்கள் கூறினர். அவர்களுடைய கைகள் கட்டப்பட்டன. அவர்கள் கூறியதன் காரணமாக சபிக்கப்பட்டனர். மாறாக, அவனுடைய இரு கைகள் விரிக்கப்பட்டுள்ளன. அவன் நாடியவாறு தர்மம் புரிகிறான். உம் இறைவனிடமிருந்து உமக்கு இறக்கப்பட்டது அவர்களில் அதிகமானோருக்கு வரம்பு மீறுவதையும் நிராகரிப்பையும் நிச்சயமாக அதிகப்படுத்தும். (நாம்) அவர்களுக்கு மத்தியில் பகைமையையும், வெறுப்பையும் மறுமை நாள் வரை (நிலைத்திருக்கும்படி) ஏற்படுத்தினோம். அவர்கள் போருக்கு நெருப்பை மூட்டும்போதெல்லாம் அல்லாஹ் அதை அணைத்து விட்டான். அவர்கள் பூமியில் கலகம் செய்வதற்காக விரைகிறார்கள். அல்லாஹ், கலகம் செய்பவர்களை நேசிக்கமாட்டான்.
الترجمة التاميلية - عمر شريف