29. (இத்தூதரை நம்பிக்கை கொண்டவர்களுக்கு) அல்லாஹ்வுடைய அருளில் ஒரு பாகமும் கிடைக்காதென்று, வேதத்தை உடையவர்கள் எண்ணிக் கொள்ளாதிருக்கும் பொருட்டே (இதை அவன் உங்களுக்கு அறிவித்தான்). அருள் அனைத்தும் நிச்சயமாக அல்லாஹ்வின் கையில் தான் இருக்கின்றன. அவன் விரும்பியவர்களுக்கு அதை அளிக்கிறான். அல்லாஹ் மகத்தான அருளுடையவன் ஆவான்.
الترجمة التاميلية
لِّئَلَّا يَعۡلَمَ أَهۡلُ ٱلۡكِتَٰبِ أَلَّا يَقۡدِرُونَ عَلَىٰ شَيۡءٖ مِّن فَضۡلِ ٱللَّهِ وَأَنَّ ٱلۡفَضۡلَ بِيَدِ ٱللَّهِ يُؤۡتِيهِ مَن يَشَآءُۚ وَٱللَّهُ ذُو ٱلۡفَضۡلِ ٱلۡعَظِيمِ
அல்லாஹ்வுடைய அருள் கொடையிலிருந்து யாதொன்றையும் பெறத் தாங்கள் சக்தியுடையவர்களல்லர் என்று வேதத்தை உடையவர்கள் எண்ணிக் கொள்ளாதிருக்கும் பொருட்டே (இவற்றை அவன் உங்களுக்கு அறிவிக்கின்றான்) அன்றியும் அருள் கொடையெல்லாம் நிச்சயமாக அல்லாஹ்வின் கையிலேயே இருக்கின்றது, தான் விரும்பியவர்களுக்கு அதனை அவன் அளிக்கின்றான் - அல்லாஹ்வே மகத்தான கிருபையுடையவன்.
Jan Trust Foundation - Tamil translation
(அவன் உங்களுக்கு இவ்வளவு நன்மைகளைக் கொடுத்தான்.) ஏனெனில், (இந்த தூதரை நம்பிக்கை கொள்ளாத) வேதக்காரர்கள் அல்லாஹ்வின் அருளில் எதன் மீதும் ஆற்றல் பெற மாட்டார்கள் என்பதையும் நிச்சயமாக சிறப்பு அல்லாஹ்வின் கரத்தில் இருக்கின்றது, அவன் நாடுகின்றவர்களுக்கு அதைக் கொடுக்கின்றான் என்பதையும் அவர்கள் அறிந்து கொள்வதற்காக ஆகும். அல்லாஹ் மகத்தான சிறப்புடையவன்.
الترجمة التاميلية - عمر شريف