19. இறக்கைகளை விரித்துக்கொண்டும், மடக்கிக்கொண்டும் இவர்களுக்கு மேல் ஆகாயத்தில் (அணி) அணியாகச் செல்லும் பறவைகளை இவர்கள் கவனிக்கவில்லையா? ரஹ்மானைத் தவிர, (மற்றெவரும்) அவற்றை (ஆகாயத்தில் தூக்கி)ப் பிடித்துக் கொண்டிருக்கவில்லை! நிச்சயமாக அவன் அனைத்தையும் உற்று நோக்குபவன் ஆவான்.
الترجمة التاميلية
أَوَلَمۡ يَرَوۡاْ إِلَى ٱلطَّيۡرِ فَوۡقَهُمۡ صَـٰٓفَّـٰتٖ وَيَقۡبِضۡنَۚ مَا يُمۡسِكُهُنَّ إِلَّا ٱلرَّحۡمَٰنُۚ إِنَّهُۥ بِكُلِّ شَيۡءِۭ بَصِيرٌ
இறக்கைகளை விரித்துக் கொண்டும், சேர்த்துக் கொண்டும், இவர்களுக்கு மேல் (வானில் பறக்கும்) பறவைகளை இவர்கள் பார்க்கவில்லையா? அர்ரஹ்மானைத் தவிர (வேறு யாரும் கீழே விழாது) அவற்றைத் தடுத்துக் கொண்டிருக்கவில்லை - நிச்சயமாக அவன் ஒவ்வொரு பொருளையும் நோட்டமிடுகிபவன்.
Jan Trust Foundation - Tamil translation
அவர்கள் தங்களுக்கு மேல் (இறக்கைகளை) விரித்தவைகளாகவும் (சில நேரம் அவற்றை தம் விலாக்களுடன்) மடக்கியவைகளாகவும் பறக்கின்ற பறவைகளை அவர்கள் பார்க்கவில்லையா? (அவை கீழே விழாமல் ஆகாயத்தில்) அவற்றை ரஹ்மானைத் தவிர (வேறு யாரும்) தடுக்கமுடியாது. நிச்சயமாக அவன் எல்லாப் பொருளையும் உற்று நோக்குபவன் ஆவான்.
الترجمة التاميلية - عمر شريف