36. நம் தெளிவான அத்தாட்சிகளுடன் மூஸா அவர்களிடம் வந்தபொழுது அவர்கள் ‘‘இது கற்பனை செய்யப்பட்ட சூனியத்தைத் தவிர வேறில்லை. முன்னிருந்த எங்கள் மூதாதைகளிடத்திலும் இத்தகைய விஷயத்தை நாம் கேள்விப்படவில்லை'' என்று கூறினார்கள்.
الترجمة التاميلية
فَلَمَّا جَآءَهُم مُّوسَىٰ بِـَٔايَٰتِنَا بَيِّنَٰتٖ قَالُواْ مَا هَٰذَآ إِلَّا سِحۡرٞ مُّفۡتَرٗى وَمَا سَمِعۡنَا بِهَٰذَا فِيٓ ءَابَآئِنَا ٱلۡأَوَّلِينَ
ஆகவே, மூஸா அவர்களிடம் நம்முடைய தெளிவான அத்தாட்சிகளுடன் வந்தபோது, அவர்கள்; "இது இட்டுக் கட்டப்பட்ட சூனியமே அன்றி வேறில்லை இன்னும் நம்முடைய முன்னோர்களான நம் மூதாதையர்களிடத்திலும் இதைக் கேள்விப்பட்டதில்லை" என்று கூறினார்கள்.
Jan Trust Foundation - Tamil translation
ஆகவே, நமது தெளிவான அத்தாட்சிகளுடன் அவர்களிடம் மூசா வந்தபோது அவர்கள் கூறினர்: “இது (நீர்) இட்டுக்கட்டப்பட்ட சூனியமே தவிர (வேறு) இல்லை. எங்கள் முந்திய மூதாதைகளில் இதைப் பற்றி நாங்கள் கேள்விப்பட்டதில்லை.
الترجمة التاميلية - عمر شريف