79. அவன் (ஒரு நாள் மிக்க ஆடம்பரமான) தன் அலங்காரத்துடன் தன் மக்கள் முன் சென்றான். (அதைக் கண்ணுற்றவர்களில்) எவர்கள் இவ்வுலக வாழ்க்கையை (பெரிதென) விரும்பியவர்களாக இருந்தார்களோ அவர்கள் ‘‘ காரூனுக்கு கொடுக்கப்பட்டது போன்று நமக்கும் கொடுக்கப்பட வேண்டுமே! நிச்சயமாக அவன் பெரும் பாக்கியவான்'' என்று கூறினார்கள்.
الترجمة التاميلية
فَخَرَجَ عَلَىٰ قَوۡمِهِۦ فِي زِينَتِهِۦۖ قَالَ ٱلَّذِينَ يُرِيدُونَ ٱلۡحَيَوٰةَ ٱلدُّنۡيَا يَٰلَيۡتَ لَنَا مِثۡلَ مَآ أُوتِيَ قَٰرُونُ إِنَّهُۥ لَذُو حَظٍّ عَظِيمٖ
அப்பால், அவன் (கர்வத்துடனும், உலக) அலங்காரத்துடன் தன் சமூகத்தரிடையே சென்றான்; (அப்போது) இவ்வுலக வாழ்க்கையை எவர் விரும்புகிறார்களோ அவர்கள்; "ஆ! காரூனுக்கு கொடுக்கப்படடதைப் போன்று நமக்கும் இருக்கக்கூடாதா? நிச்சயமாக, அவன் மகத்தான பாக்கியமுடையவன்"' என்று கூறினார்கள்.
Jan Trust Foundation - Tamil translation
அவன் தனது அலங்காரத்தில் தனது மக்களுக்கு முன் வெளியில் வந்தான். உலக வாழ்க்கையை விரும்புகின்றவர்கள் (அவனைப் பார்த்து) கூறினார்கள்: “காரூனுக்கு வழங்கப்பட்டது போன்று நமக்கும் (செல்வங்கள்) இருக்க வேண்டுமே! நிச்சயமாக அவன் பெரும் பேருடையவன்.
الترجمة التاميلية - عمر شريف