20. எவர்கள் தங்கள் இறைவனுக்குப் பயந்து நடக்கிறார்களோ அவர்களுக்கு, (சொர்க்கத்தில்) மேல்மாடிகள் உண்டு. அதற்கு மேலும் கட்டடங்கள் எழுப்பப்பட்டிருக்கும். அதில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும். (இவ்வாறே அவர்களுக்கு) அல்லாஹ் வாக்களித்திருக்கிறான். அல்லாஹ் தன் வாக்குறுதியில் மாறமாட்டான்.
الترجمة التاميلية
لَٰكِنِ ٱلَّذِينَ ٱتَّقَوۡاْ رَبَّهُمۡ لَهُمۡ غُرَفٞ مِّن فَوۡقِهَا غُرَفٞ مَّبۡنِيَّةٞ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُۖ وَعۡدَ ٱللَّهِ لَا يُخۡلِفُ ٱللَّهُ ٱلۡمِيعَادَ
ஆனால், எவர்கள் தங்கள் இறைவனுக்கு பயபக்தியுடன் நடந்து கொள்கிறார்களோ அவர்களுக்கு அடுக்கடுக்கான மேன்மாளிகைகள் உண்டு அவற்றின் கீழே ஆறுகள் சதா ஓடிக் கொண்டிருக்கும். (இதுவே) அல்லாஹ்வின் வாக்குறுதி - அல்லாஹ் தன் வாக்குறுதியியல் மாற மாட்டான்.
Jan Trust Foundation - Tamil translation
எனினும், எவர்கள் தங்கள் இறைவனை அஞ்சினார்களோ அவர்களுக்கு மாடி அறைகள் உண்டு. அவற்றுக்குமேல் (-அந்த அறைகளுக்கு மேல் இன்னும் பல) அறைகள் கட்டப்பட்டிருக்கும். அவற்றைச் சுற்றி நதிகள் ஓடும். (இது) அல்லாஹ்வின் வாக்காகும். அல்லாஹ் (தனது) வாக்கை மாற்றமாட்டான்.
الترجمة التاميلية - عمر شريف