23. நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்த தன் (நல்) அடியார்களுக்கு அல்லாஹ் நற்செய்தி கூறுவதும் இதுவே. (நபியே!) நீர் கூறுவீராக: ‘‘இதற்காக நான் ஒரு கூலியும் கேட்கவில்லை, உறவினர்களை நேசிப்பதைத் தவிர, எவர் நற்செயல்களைத் தேடிக் கொள்கிறாரோ, அவருக்கு நாம் அதில் நன்மையை அதிகரிக்கச் செய்கிறோம். ''நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவனும், நன்றியை(யும்) அங்கீகரிப்பவனும் ஆவான்.
الترجمة التاميلية
ذَٰلِكَ ٱلَّذِي يُبَشِّرُ ٱللَّهُ عِبَادَهُ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّـٰلِحَٰتِۗ قُل لَّآ أَسۡـَٔلُكُمۡ عَلَيۡهِ أَجۡرًا إِلَّا ٱلۡمَوَدَّةَ فِي ٱلۡقُرۡبَىٰۗ وَمَن يَقۡتَرِفۡ حَسَنَةٗ نَّزِدۡ لَهُۥ فِيهَا حُسۡنًاۚ إِنَّ ٱللَّهَ غَفُورٞ شَكُورٌ
ஈமான் கொண்டு (ஸாலிஹான) நல்ல அமல்கள் செய்துவரும் தன் அடியார்களுக்கு அல்லாஹ் நன்மாராயங் கூறுவதும் இதுவே (நபியே!) நீர் கூறும்; "உறவினர்கள் மீது அன்பு கொள்வதைத் தவிர, இதற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை!" அன்றியும், எவர் ஒரு நன்மை செய்கிறாரோ, அவருக்கு நாம் அதில் பின்னும் (பல) நன்மையை அதிகமாக்குவோம்; நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நன்றியை ஏற்றுக் கொள்பவனாகவும் இருக்கின்றான்.
Jan Trust Foundation - Tamil translation
(நல்லவர்களுக்குள்ள சொர்க்க இன்பமாகிய) இது, நம்பிக்கை கொண்டு நன்மைகளை செய்த தன் அடியார்களுக்கு அல்லாஹ் (இவற்றின் மூலம்) நற்செய்தி கூறுகின்றான். (நபியே!) கூறுவீராக! இதற்காக நான் உங்களிடத்தில் எந்த கூலியையும் கேட்கவில்லை, உறவினால் உள்ள அன்பைத் தவிர. யார் அழகிய அமலை செய்வாரோ அவருக்கு அதில் (மேலும்) அழகை நாம் அதிகப்படுத்துவோம். (ஒரு நன்மைக்கு பத்து நன்மைகளை கூலியாகத் தருவோம்.) நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், நன்றியறிபவன் ஆவான்.
الترجمة التاميلية - عمر شريف