104. “அல்லாஹ் இறக்கிவைத்த (வேதத்)தின் பக்கமும், (அவனுடைய) தூதரின் பக்கமும் வாருங்கள்'' என அவர்களுக்குக் கூறப்பட்டால், “எங்கள் மூதாதைகள் எதன் மீதிருக்க நாங்கள் கண்டோமோ அதுவே (நாங்கள் பின்பற்ற) எங்களுக்கு போதும்'' எனக் கூறுகின்றனர். அவர்களுடைய மூதாதைகள் எதையும் அறிந்து கொள்ளாமலும், நேரான வழியில் இல்லாமலும் இருந்தாலுமா (அவர்கள் தங்கள் மூதாதைகளைப் பின்பற்றுவார்கள்)!
الترجمة التاميلية
وَإِذَا قِيلَ لَهُمۡ تَعَالَوۡاْ إِلَىٰ مَآ أَنزَلَ ٱللَّهُ وَإِلَى ٱلرَّسُولِ قَالُواْ حَسۡبُنَا مَا وَجَدۡنَا عَلَيۡهِ ءَابَآءَنَآۚ أَوَلَوۡ كَانَ ءَابَآؤُهُمۡ لَا يَعۡلَمُونَ شَيۡـٔٗا وَلَا يَهۡتَدُونَ
"அல்லாஹ் இறக்கி அருளிய (வேதத்)தின்பாலும், இத்தூதரின்பாலும் வாருங்கள்" என அவர்களுக்குக் கூறப்பட்டால், "எங்களுடைய தந்தையர் (மூதாதையர்)களை நாங்கள் எ(ந்த மார்க்கத்)தில் கண்டோமோ அதுவே எங்களுக்குப் போதுமானது" என்று அவர்கள் கூறுகிறார்கள்; என்ன! அவர்களுடைய தந்தையர் (மூதாதையர்கள்) ஒன்றும் அறியாதவர்களாகவும், நேர்வழியில் நடக்காதவர்களாகவும் இருந்தாலுமா? (அவர்களைப் பின்பற்றுவார்கள்.)
Jan Trust Foundation - Tamil translation
"அல்லாஹ் இறக்கியதின் பக்கமும், (அவனுடைய) தூதரின் பக்கமும் வாருங்கள்'' என அவர்களுக்குக் கூறப்பட்டால், "எங்கள் மூதாதைகளை எதன் மீது கண்டோமோ அதுவே எங்களுக்குப் போதும்.'' எனக் கூறுகின்றனர். அவர்களுடைய மூதாதைகள் எதையும் அறியாமலும், நேர் வழிபெறாமலும் இருந்தாலுமா (அம்மூதாதைகளை இவர்கள் பின்பற்றுவார்கள்)?
الترجمة التاميلية - عمر شريف