49. (நபியே!) அல்லாஹ் இறக்கிவைத்தவற்றைக் கொண்டே நீர் அவர்களுக்கிடையில் தீர்ப்பளிப்பீராக. நீர் அவர்களுடைய மன விருப்பங்களைப் பின்பற்றாதீர். உமக்கு அல்லாஹ் இறக்கிவைத்தவற்றில் எதிலிருந்தும் உம்மை அவர்கள் திருப்பிவிடாதபடியும் நீர் அவர்களைப் பற்றி எச்சரிக்கையாய் இருப்பீராக. (உமது தீர்ப்பை) அவர்கள் புறக்கணித்து விட்டால் நிச்சயமாக நீர் அறிந்துகொள்வீராக, அவர்களின் சில (கொடிய) பாவங்களின் காரணமாக அல்லாஹ் (அவர்களைத் தண்டிக்க) அவர்களுக்குக் கஷ்டத்தைத் தர விரும்புகிறான். நிச்சயமாக, மனிதர்களில் பெரும்பாலோர் பாவிகள்தான்.
الترجمة التاميلية
وَأَنِ ٱحۡكُم بَيۡنَهُم بِمَآ أَنزَلَ ٱللَّهُ وَلَا تَتَّبِعۡ أَهۡوَآءَهُمۡ وَٱحۡذَرۡهُمۡ أَن يَفۡتِنُوكَ عَنۢ بَعۡضِ مَآ أَنزَلَ ٱللَّهُ إِلَيۡكَۖ فَإِن تَوَلَّوۡاْ فَٱعۡلَمۡ أَنَّمَا يُرِيدُ ٱللَّهُ أَن يُصِيبَهُم بِبَعۡضِ ذُنُوبِهِمۡۗ وَإِنَّ كَثِيرٗا مِّنَ ٱلنَّاسِ لَفَٰسِقُونَ
இன்னும் அல்லாஹ் அருள் செய்த (சட்ட திட்டத்)தைக் கொண்டே அவர்களிடையில் தீர்ப்புச் செய்வீராக. அவர்களுடைய மன இச்சைகளைப் பின்பற்றாதீர்கள்;. அல்லாஹ் உம்மீது இறக்கிவைத்ததில் சிலவற்றை விட்டும் அவர்கள் உம்மைத் திருப்பிவிடாதபடி, அவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பீராக. (உம் தீர்ப்பை) அவர்கள் புறக்கணித்து விடுவார்களானால், சில பாவங்களின் காரணமாக அவர்களைப் பிடிக்க நிச்சயமாக அல்லாஹ் நாடுகிறான் என்பதை அறிந்து கொள்வீராக. மேலும் நிச்சயமாக மனிதர்களில் பெரும்பாலோர் பாவிகளாகவே இருக்கின்றனர்.
Jan Trust Foundation - Tamil translation
(நபியே!) அல்லாஹ் இறக்கியதைக் கொண்டு அவர்களுக்கு மத்தியில் தீர்ப்பளிப்பீராக. அவர்களின் விருப்பங்களைப் பின்பற்றாதீர். உமக்கு அல்லாஹ் இறக்கியதில் சிலவற்றிலிருந்து உம்மை அவர்கள் திருப்பிவிடுவதை குறித்தும் அவர்களிடம் எச்சரிக்கையுடன் இருப்பீராக. அவர்கள் (புறக்கணித்து) திரும்பினால் அறிந்து கொள்வீராக அல்லாஹ் நாடுவதெல்லாம் அவர்களை அவர்களுடைய பாவங்கள் சிலவற்றின் காரணமாக அவர்களை சோதிப்பதைத்தான். நிச்சயமாக, மனிதர்களில் அதிகமானோர் பாவிகள்தான்.
الترجمة التاميلية - عمر شريف