93. நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறவர்கள் (தடுக்கப்பட்ட உணவில்) எதையும் (அது தடை செய்யப்படுவதற்கு முன்னர்) புசித்திருந்தால் (அது) அவர்களின் மீது குற்றமாகாது, (தடுக்கப்பட்டபின் அவற்றிலிருந்து) அவர்கள் விலகி, நம்பிக்கையின் மீதே உறுதியாக இருந்து, நற்செயல்களையும் செய்து, (மற்ற பாவங்களிலிருந்தும்) விலகி, நம்பிக்கையை உறுதிப்படுத்தி, (அல்லாஹ்வுக்குப்) பயந்து, (பிறருக்கு) நன்மையும் செய்து கொண்டிருந்தால் (போதுமானது. ஆகவே, தடுக்கப்பட்டவற்றை முன்னர் புசித்துவிட்டது பற்றிக் குற்றம் பிடிக்கப்பட மாட்டாது.) அல்லாஹ் (இத்தகைய) நல்லவர்களையே நேசிக்கிறான்.
الترجمة التاميلية
لَيۡسَ عَلَى ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّـٰلِحَٰتِ جُنَاحٞ فِيمَا طَعِمُوٓاْ إِذَا مَا ٱتَّقَواْ وَّءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّـٰلِحَٰتِ ثُمَّ ٱتَّقَواْ وَّءَامَنُواْ ثُمَّ ٱتَّقَواْ وَّأَحۡسَنُواْۚ وَٱللَّهُ يُحِبُّ ٱلۡمُحۡسِنِينَ
ஈமான் கொண்டு, நற்கருமங்கள் செய்பவர்கள் (எதிர்காலத்தில்) தங்களைப் (பாவத்திலிருந்து) காத்துக் கொண்டும், ஈமான் கொண்டும், மேலும் நற்கருமங்கள் செய்து கொண்டும், (விலக்கப்பட்டவற்றை விட்டுத்) தங்களைப்(பின்னரும்) பாதுகாத்துக் கொண்டும், ஈமானில் உறுதியாக இருந்து கொண்டும், மேலும் (அல்லாஹ்வுக்கு) அஞ்சியவர்களாக அழகிய நன்மைகளைச் செய்து வருவார்களானால், சென்ற காலத்தில் (இவ்விதிமுறைகள் வருமுன்) தடுக்கப்பட்டவற்றை அவர்கள் புசித்து விட்டது குறித்து அவர்கள் மீது குற்றம் ஏற்படாது. நன்மை செய்கிறவர்களையே அல்லாஹ் நேசிக்கிறான்.
Jan Trust Foundation - Tamil translation
நம்பிக்கை கொண்டு நன்மைகளைச் செய்தவர்கள் மீது குற்றமில்லை. (தடுக்கப்பட்ட உணவை தடை வருவதற்கு முன்பு) அவர்கள் புசித்ததில், (தடைக்குப் பின்பு அதிலிலிருந்து) அவர்கள் விலகி, நம்பிக்கை கொண்டு, நற்செயல்களை செய்து, பிறகு அல்லாஹ்வை அஞ்சி, நம்பிக்கை கொண்டு, பிறகு, அல்லாஹ்வை அஞ்சி, (பிறருக்கும்) நல்லறம் செய்தால், (தடுக்கப்பட்டவற்றை அவர்கள் முன்பு புசித்தது மன்னிக்கப்படும்). அல்லாஹ் நல்லறம் புரிவோரை நேசிக்கிறான்.
الترجمة التاميلية - عمر شريف