23. (நபியே!) கூறுவீராக: அவன்தான் உங்களைப் படைத்து உங்களுக்குச் செவிகளையும், கண்களையும், உள்ளங்களையும் கொடுத்தவன். (அவ்வாறிருந்தும்) நீங்கள் வெகு சொற்பமாகவே (அவனுக்கு) நன்றி செலுத்துகிறீர்கள்.
الترجمة التاميلية
قُلۡ هُوَ ٱلَّذِيٓ أَنشَأَكُمۡ وَجَعَلَ لَكُمُ ٱلسَّمۡعَ وَٱلۡأَبۡصَٰرَ وَٱلۡأَفۡـِٔدَةَۚ قَلِيلٗا مَّا تَشۡكُرُونَ
(நபியே!) நீர் கூறுவீராக: "அவனே உங்களைப் படைத்து உங்களுக்குச் செவிப்புலனையும், பார்வைகளையும் இதயங்களையும் அமைத்தான்; (எனினும்) மிகவும் சொற்பமாகவே நீங்கள் நன்றி செலுத்துகிறீர்கள்."
Jan Trust Foundation - Tamil translation
(நபியே!) கூறுவீராக! அவன்தான் உங்களை உருவாக்கினான். இன்னும் உங்களுக்கு செவியையும் பார்வைகளையும் உள்ளங்களையும் ஏற்படுத்தினான். நீங்கள் (அவனுக்கு) மிகக் குறைவாகவே நன்றி செலுத்துகின்றீர்கள்!
الترجمة التاميلية - عمر شريف