44. (நபியே! தூர் ஸீனாய் என்னும் மலையில்) நாம் மூஸாவுக்குக் (கற்பலகையில் எழுதப்பட்ட) கட்டளைகளை விதித்தபோது நீர் அதன் மேற்குத் திசையிலும் இருக்கவில்லை. அதைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களிலும் நீர் இருக்கவில்லை.
الترجمة التاميلية
وَمَا كُنتَ بِجَانِبِ ٱلۡغَرۡبِيِّ إِذۡ قَضَيۡنَآ إِلَىٰ مُوسَى ٱلۡأَمۡرَ وَمَا كُنتَ مِنَ ٱلشَّـٰهِدِينَ
மேலும், நாம் மூஸாவுக்குக் கட்டளைகளைக் கடமையாக்கிய சமயம் நீர் (தூர் மலைக்கு) மேற்குத் திசையில் இருக்கவில்லை (அந்நிகழ்வைப்) பார்ப்பவர்களில் ஒருவராகவும் நீர் இருக்கவில்லை.
Jan Trust Foundation - Tamil translation
மூசாவிடம் நாம் (தூதுத்துவத்தையும் பல) சட்டங்களை(யும்) ஒப்படைத்த போது. (மலையின்) மேற்கு பக்கத்தில் (நபியே!) நீர் இருக்கவில்லை. (இன்னும் அவருடன்) இருந்தவர்களில் நீர் இருக்கவில்லை. (அப்படி இருந்தும் மூசாவைப் பற்றிய வரலாற்றை நீங்கள் உண்மையாகக் கூறுகிறீர்கள். ஆகவே, உமது தூதுத்துவத்தை இந்த மக்கள் எப்படி மறுக்கமுடியும்?)
الترجمة التاميلية - عمر شريف