75. ஒவ்வொரு வகுப்பாரிலிருந்தும் (நம் தூதர்களை) அவர்களுக்கு எதிரான சாட்சிகளாக அழைத்துக் கொண்டு (அவர்களை நோக்கி ‘‘ என்னையன்றி பிற படைப்புகளை தெய்வங்களென நீங்கள் கூறிக் கொண்டிருந்தீர்களே) அதற்குரிய உங்கள் அத்தாட்சிகளைக் கொண்டு வாருங்கள்'' என்று நாம் கூறும் சமயத்தில், அவர்கள் பொய்யாகக் கூறிக் கொண்டிருந்த தெய்வங்களெல்லாம் மறைந்து, உண்மை(யான இறைத் தன்மை) அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தானதென்பதை அவர்கள் திட்டமாக அறிந்து கொள்வார்கள்.
الترجمة التاميلية
وَنَزَعۡنَا مِن كُلِّ أُمَّةٖ شَهِيدٗا فَقُلۡنَا هَاتُواْ بُرۡهَٰنَكُمۡ فَعَلِمُوٓاْ أَنَّ ٱلۡحَقَّ لِلَّهِ وَضَلَّ عَنۡهُم مَّا كَانُواْ يَفۡتَرُونَ
இன்னும், நாம் ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் ஒரு சாட்சியை வைத்துக் கொண்டு (முஷ்ரிக்குகளை நோக்கி) "உங்கள் ஆதாரத்தைக் கொண்டு வாருங்கள்" என்று கூறுவோம்; அப்பொழுது அவர்கள் சத்தியமென்பது அல்லாஹ்வுக்Nகு சொந்தமென்றும், அவர்கள் இட்டுக்கட்டியவை யெல்லாம் அவர்களை விட்டும் மறைந்துவிடும் என்றும் அறிந்து கொள்வார்கள்.
Jan Trust Foundation - Tamil translation
ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் ஒரு சாட்சியாளரை (-அதன் தூதரை) நாம் கொண்டு வருவோம். பிறகு, உங்கள் ஆதாரங்களைக் கொண்டு வாருங்கள் என்று கூறுவோம். அவர்கள், “நிச்சயமாக உண்மை(யான ஆதாரம்) அல்லாஹ் விற்கே உரியது” என்று அறிந்து கொள்வார்கள். அவர்கள் பொய்யாக கற்பனை செய்து கொண்டிருந்தவை அவர்களை விட்டு தவறிவிடும்.
الترجمة التاميلية - عمر شريف