73. (அத்தகைய பொறுப்பை ஏற்றுக்கொண்டு, அதற்கு மாறாக நடக்கும்) நயவஞ்சக ஆண்களையும் பெண்களையும், இணைவைத்து வணங்கும் ஆண்களையும் பெண்களையும் அல்லாஹ் வேதனை செய்வான். (அந்த பொறுப்பை மதித்து நடக்கும்) நம்பிக்கையாளர்களாகிய ஆண்களையும் பெண்களையும் (அவர்களுடைய) தவறிலிருந்து (அருளின் பக்கம்) அல்லாஹ் திருப்பிவிடுவான். அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாக கருணை உடையவனாக இருக்கிறான்.
الترجمة التاميلية
لِّيُعَذِّبَ ٱللَّهُ ٱلۡمُنَٰفِقِينَ وَٱلۡمُنَٰفِقَٰتِ وَٱلۡمُشۡرِكِينَ وَٱلۡمُشۡرِكَٰتِ وَيَتُوبَ ٱللَّهُ عَلَى ٱلۡمُؤۡمِنِينَ وَٱلۡمُؤۡمِنَٰتِۗ وَكَانَ ٱللَّهُ غَفُورٗا رَّحِيمَۢا
எனவே (இவ்வமானிதத்திற்கு மாறு செய்யும்) முனாஃபிக்கான ஆண்; களையும்;, முனாஃபிக்கான பெண்களையும்;, முஷ்ரிக்கான ஆண்களையும், முஷ்ரிக்கான பெண்களையும் நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வான்; (ஆனால் இவ்வமானிதத்தை மதித்து நடக்கும்) முஃமினான ஆண்களையும், முஃமினான பெண்களையும் (அவர்கள் தவ்பாவை ஏற்று) மன்னிக்கின்றான். அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்.
Jan Trust Foundation - Tamil translation
நயவஞ்சகமுடைய ஆண்களையும், நயவஞ்சகமுடைய பெண்களையும், இணைவைக்கின்ற ஆண்களையும், இணைவைக்கின்ற பெண்களையும் அல்லாஹ் வேதனை செய்வதற்காகவும், நம்பிக்கை கொண்ட ஆண்களையும் நம்பிக்கை கொண்ட பெண்களையும் அல்லாஹ் மன்னிப்பதற்காகவும் (அல்லாஹ் அவனது கட்டளைகளை கொடுத்து சோதிக்கின்றான்). அல்லாஹ் மகா மன்னிப்பாளனாக பெரும் கருணையாளனாக இருக்கின்றான்.பேரருளாளன் பேரன்பாளன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...
الترجمة التاميلية - عمر شريف