24. எவன், மறுமையின் கொடிய வேதனையைத் தன் முகத்தைக் கொண்டேனும் தடுத்துக் கொள்ளப் பிரயாசைப்படுபவனா (சொர்க்கவாசிக்கு சமமாவான்)? அநியாயக்காரர்களை நோக்கி நீங்கள் தேடிக் கொண்ட (தீய) செயலைச் சுவைத்துப் பாருங்கள் என்றுதான் கூறப்படும்.
الترجمة التاميلية
أَفَمَن يَتَّقِي بِوَجۡهِهِۦ سُوٓءَ ٱلۡعَذَابِ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِۚ وَقِيلَ لِلظَّـٰلِمِينَ ذُوقُواْ مَا كُنتُمۡ تَكۡسِبُونَ
எவன் கியாம நாளின் கொடிய வேதனையைத் தன் முகத்தைக்கொண்டேனும் தடுத்துக் கொள்ள முற்படுகிறானோ அவன் (சுவர்க்க வாசியாக முடியுமா?) மேலும், அநியாயக் காரர்களுக்கு "நீங்கள் சம்பாதித்துக் கொண்டதை (தீவினைப் பயனை) அனுபவியுங்கள்" என்று கூறப்படும்.
Jan Trust Foundation - Tamil translation
தனது முகத்தால் மறுமை நாளில் கெட்ட வேதனையை தவிர்த்துக் கொள்பவன் (கைகள் விலங்கிடப்பட்டு நரகத்தில் தலைகீழாக எறியப்படுகின்றவனைப் போன்று ஆவாரா?) அநியாயக்காரர்களுக்கு கூறப்படும்: “நீங்கள் செய்து வந்ததை (அதற்குரிய தண்டனையை இப்போது) சுவையுங்கள்!”
الترجمة التاميلية - عمر شريف