38. (நபியே!) வானங்களையும் பூமியையும், படைத்தவன் யார்? என்று நீர் அவர்களைக் கேட்பீராயின், ‘‘அல்லாஹ்தான்'' என்று நிச்சயமாக அவர்கள் கூறுவார்கள். மேலும், (நபியே! அவர்களை நோக்கி) கூறுவீராக: அல்லாஹ் எனக்கு ஒரு தீங்கிழைக்க நாடினால், (நீங்கள் தெய்வங்களென அழைக்கும் அல்லாஹ் அல்லாத) அவை அத்தீங்கை நீக்கிவிட முடியுமா என்பதை நீங்கள் கவனித்தீர்களா? அல்லது அவன் எனக்கு ஏதும் அருள்புரிய நாடினால், அவனுடைய அருளை இவை தடுத்துவிடுமா (என்பதையும் நீங்கள் கவனித்தீர்களா)? (நபியே!) கூறுவீராக: ‘‘அல்லாஹ் (ஒருவனே) எனக்குப் போதுமானவன். நம்பக்கூடியவர்கள் அனைவரும் அவனையே நம்பவும்.''
الترجمة التاميلية
وَلَئِن سَأَلۡتَهُم مَّنۡ خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ لَيَقُولُنَّ ٱللَّهُۚ قُلۡ أَفَرَءَيۡتُم مَّا تَدۡعُونَ مِن دُونِ ٱللَّهِ إِنۡ أَرَادَنِيَ ٱللَّهُ بِضُرٍّ هَلۡ هُنَّ كَٰشِفَٰتُ ضُرِّهِۦٓ أَوۡ أَرَادَنِي بِرَحۡمَةٍ هَلۡ هُنَّ مُمۡسِكَٰتُ رَحۡمَتِهِۦۚ قُلۡ حَسۡبِيَ ٱللَّهُۖ عَلَيۡهِ يَتَوَكَّلُ ٱلۡمُتَوَكِّلُونَ
வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்? என்று நீர் அவர்களைக் கேட்பீர்களாயின்; "அல்லாஹ் தான்!" என்று அவர்கள் நிச்யமாகக் கூறுவார்கள்; (நபியே!) நீர் சொல்வீராக "அல்லாஹ் எனக்கு ஏதேனும் ஒரு கெடுதி செய்ய நாடினால் நீங்கள் (பிரார்த்தித்து) அழைக்கும் அல்லாஹ் அல்லாதவை அக்கெடுதியை நீக்கிவிட முடியுமா? அல்லது அவன் எனக்கு ரஹ்மத் செய்ய நாடினால்; அவனுடைய (அந்த) ரஹ்மத்தை அவை தடுத்துவிட முடியுமா? என்பதை நீங்கள் கவனித்தீர்களா?" (நபியே!) மேலும் நீர் கூறுவீராக "அல்லாஹ்வே எனக்குப் போதுமானவன்; உறுதியாக நம்பிக்கை வைப்போரெல்லாம், அவன் மீதே உறுதியாக நம்பிக்கை கொள்ளல் வேண்டும்."
Jan Trust Foundation - Tamil translation
(நபியே!) நீர் அவர்களிடம் கேட்டால், வானங்களையும் பூமியையும் யார் படைத்தான் என்று? அவர்கள் கூறுவார்கள்: அல்லாஹ் என்று. (நபியே!) கூறுவீராக! அல்லாஹ்வை அன்றி நீங்கள் அழைப்பவை - வணங்குபவைப் பற்றி நீங்கள் அறிவியுங்கள்! அல்லாஹ் எனக்கு ஒரு தீங்கை நாடினால் அவை அவனது தீங்கை நீக்கக்கூடியவையா? அல்லது அவன் எனக்கு ஓர் அருளை நாடினால் அவை அவனது அருளை தடுத்துவிடக் கூடியவையா? (நபியே!) கூறுவீராக! அல்லாஹ்வே எனக்குப் போதுமானவன். நம்பிக்கை வைப்பவர்கள் அவன் மீதே நம்பிக்கை வைக்கட்டும்.
الترجمة التاميلية - عمر شريف