8. மனிதனுக்கு ஒரு தீங்கு ஏற்படும் சமயத்தில், முற்றிலும் தன் இறைவனையே நோக்கிப் பிரார்த்தனை செய்த வண்ணமாயிருக்கிறான். இறைவன் தன்னிடமிருந்து ஓர் அருளை அவனுக்குப் புரியும் சமயத்தில், இதற்கு முன்னர், தான் பிரார்த்தனை செய்து கொண்டிருந்த அவனையே மறந்து விடுகிறான். அல்லாஹ்வுக்கு (பொய்யான தெய்வங்களை) இணைகளாக்கி மற்றவர்களையும் அவனுடைய பாதையிலிருந்து வழி கெடுக்கிறான். (நபியே! அவனை நோக்கி,) நீர் கூறுவீராக: ‘‘நீ (இவ்வாறு இறைவனை) நிராகரித்த வண்ணமே சிறிது காலம் சுகமனுபவி. (முடிவில்) நிச்சயமாக நீ நரகவாசிதான்.''
الترجمة التاميلية
۞وَإِذَا مَسَّ ٱلۡإِنسَٰنَ ضُرّٞ دَعَا رَبَّهُۥ مُنِيبًا إِلَيۡهِ ثُمَّ إِذَا خَوَّلَهُۥ نِعۡمَةٗ مِّنۡهُ نَسِيَ مَا كَانَ يَدۡعُوٓاْ إِلَيۡهِ مِن قَبۡلُ وَجَعَلَ لِلَّهِ أَندَادٗا لِّيُضِلَّ عَن سَبِيلِهِۦۚ قُلۡ تَمَتَّعۡ بِكُفۡرِكَ قَلِيلًا إِنَّكَ مِنۡ أَصۡحَٰبِ ٱلنَّارِ
இன்னும் மனிதனை ஏதேனும் ஒரு துன்பம் தீண்டுமானால், அவன் தன் இறைவன்பால் திரும்பி அவனை அழை(த்துப் பிரார்த்தி)க்கின்றான்; பின்னர் (இறைவன்) தன்னிடமிருந்து ஓர் அருட்கொடையை அவனுக்கு அளித்தானானால், முன்னர் அவன் எதற்காக அவனை அழைத்து(ப் பிரார்த்தித்து)க் கொண்டிருந்தானோ அதை மறந்து விடுகிறான். அல்லாஹ்வுக் இணைகளை ஏற்படுத்தி (மற்றவர்களை) அல்லாஹ்வுடைய பாதையிலிருந்து வழிகெடுக்கிறான். (நபியே!) நீர் கூறுவீராக "உன் குஃப்ரை (நிராகரிப்பை)க் கொண்டு சிறிது காலம் சுகமனுபவி; நிச்சயமாக நீ நரகவாதிகளில் நின்றுமுள்ளவனே."
Jan Trust Foundation - Tamil translation
மனிதனுக்கு ஒரு தீங்கு ஏற்பட்டால் அவன் தன் இறைவனை அவன் பக்கம் முற்றிலும் திரும்பியவனாக பிரார்த்திக்கின்றான். பிறகு, அவன் (-அல்லாஹ்) தன் புறத்தில் இருந்து அவனுக்கு ஓர் அருளை வழங்கினால் இதற்கு முன்னர் தான் அவனிடம் (-இறைவனிடம்) பிரார்த்தித்து வந்ததை அவன் விட்டு விடுகிறான். இன்னும், அல்லாஹ்விற்கு இணை(யாக கற்பனை தெய்வங்)களை ஏற்படுத்துகிறான், அவனுடைய பாதையை விட்டு (மக்களை) வழிகெடுப்பதற்காக. (நபியே!) “கூறுவீராக! நீ உனது நிராகரிப்பைக் கொண்டு கொஞ்சகாலம் சுகமடைந்துகொள்! நிச்சயமாக நீ நரகவாசிகளில் ஒருவன்தான்.”
الترجمة التاميلية - عمر شريف