78. (நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு முன்னர் தூதர்கள் பலரை அனுப்பியிருக்கிறோம். அவர்களில் சிலருடைய சரித்திரத்தையே நாம் உமக்குக் கூறியிருக்கிறோம். அவர்களில் பலருடைய சரித்திரத்தை நாம் உமக்குக் கூறவில்லை. (இவ்விரு வகுப்பாரில்) எந்தத் தூதராயினும் சரி, அல்லாஹ்வுடைய அனுமதியின்றி ஓர் அத்தாட்சியைக் கொண்டு வருவது அவருக்குச் சாத்தியமானதல்ல. அல்லாஹ்வுடைய கட்டளை வரும் சமயத்தில் (அவர்களுக்கு) நியாயமாகவே தீர்ப்பளிக்கப்படும். அதைப் பொய்யாக்கியவர்கள் அந்நேரத்தில் நஷ்டத்திற்குள்ளாவார்கள்.
الترجمة التاميلية
وَلَقَدۡ أَرۡسَلۡنَا رُسُلٗا مِّن قَبۡلِكَ مِنۡهُم مَّن قَصَصۡنَا عَلَيۡكَ وَمِنۡهُم مَّن لَّمۡ نَقۡصُصۡ عَلَيۡكَۗ وَمَا كَانَ لِرَسُولٍ أَن يَأۡتِيَ بِـَٔايَةٍ إِلَّا بِإِذۡنِ ٱللَّهِۚ فَإِذَا جَآءَ أَمۡرُ ٱللَّهِ قُضِيَ بِٱلۡحَقِّ وَخَسِرَ هُنَالِكَ ٱلۡمُبۡطِلُونَ
திட்டமாக நாம் உமக்கு முன்னர் தூதர்களை அனுப்பியிருக்கின்றோம்; அவர்களில் சிலருடைய வரலாற்றை உமக்குக் கூறியுள்ளோம்; இன்னும் எவர்களுடைய வரலாற்றை உமக்குக் கூறவில்லையோ (அவர்களும்) அத்தூதர்களில் இருக்கின்றனர் (இவ்விருசாராரில்) எந்தத் தூதரும் அல்லாஹ்வின் அனுமதியின்றி எந்த அத்தாட்சியையும் கொண்டு வருவதற்கு (அதிகாரமும்) இல்லை ஆகவே அல்லாஹ்வுடைய கட்டளைவரும் போது, (அனைவருக்கும்) நியாயமாகத் தீர்ப்பளிக்கப்படும்; அன்றியும், அந்த இடத்தில் பொய்யர்கள் தாம் நஷ்டமடைவார்கள்.
Jan Trust Foundation - Tamil translation
திட்டவட்டமாக உமக்கு முன்னர் பல தூதர்களை நாம் அனுப்பினோம். அவர்களில் சிலரை (சிலரின் வரலாறுகளை) நாம் உமக்கு விவரித்தோம். அவர்களில் சிலரை (அவர்களின் வரலாறுகளை) நாம் உமக்கு விவரிக்கவில்லை. அல்லாஹ்வின் அனுமதி கொண்டே தவிர எந்த ஒரு தூதருக்கும் ஓர் அத்தாட்சியைக் கொண்டுவர முடியாது. அல்லாஹ்வின் கட்டளை வந்துவிட்டால் நீதமாக தீர்ப்பளிக்கப்படும். அப்போது பொய்யர்கள் நஷ்டமடைவார்கள்.
الترجمة التاميلية - عمر شريف