24. (நபியே!) அல்லாஹ்வின் மீது நீர் பொய்யைக் கற்பனை செய்து கூறுவதாக அவர்கள் (உம்மைப் பற்றிக்) கூறுகின்றனரா? (அவ்வாறாயின், நம் இவ்வேதத்தை அவர்களுக்கு நீர் ஓதிக்காண்பிக்க முடியாதவாறு) அல்லாஹ் நாடினால், உமது உள்ளத்தின் மீது முத்திரையிட்டு இருப்பான். (ஆகவே, அவர்களுடைய இக்கூற்று முற்றிலும் தவறானதாகும்.) அல்லாஹ்வோ, பொய்யை அழித்துத் தன் வசனங்களைக் கொண்டே உண்மையை உறுதிப்படுத்துவான். நிச்சயமாக அவன், உள்ளங்களில் (ரகசியமாக) உள்ளவற்றையும் நன்கறிந்தவன்.
الترجمة التاميلية
أَمۡ يَقُولُونَ ٱفۡتَرَىٰ عَلَى ٱللَّهِ كَذِبٗاۖ فَإِن يَشَإِ ٱللَّهُ يَخۡتِمۡ عَلَىٰ قَلۡبِكَۗ وَيَمۡحُ ٱللَّهُ ٱلۡبَٰطِلَ وَيُحِقُّ ٱلۡحَقَّ بِكَلِمَٰتِهِۦٓۚ إِنَّهُۥ عَلِيمُۢ بِذَاتِ ٱلصُّدُورِ
அல்லது (உம்மைப் பற்றி) அவர்கள்; "அவர் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டிக் கூறுகிறார்" என்று சொல்கிறார்களா? அல்லாஹ் நாடினால் அவன் உம் இருதயத்தின் மீது முத்திரையிட்டிருப்பான்; அன்றியும் அல்லாஹ் பொய்யை அழித்து, தன் வசனங்களைக் கொண்டு உண்மையை உறுதிப்படுத்துகிறான்; நிச்சயமாக நெஞ்சங்களிலிருப்பதை அவன் மிக அறிந்தவன்.
Jan Trust Foundation - Tamil translation
(இந்த தூதர்) அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டினார் என்று இவர்கள் கூறுகிறார்களா? (நபியே! நீர் அப்படி பொய் கூறி இருந்தால்) அல்லாஹ் நாடினால் உமது உள்ளத்தின் மீது அவன் முத்திரையிட்டு விடுவான். (இந்த வேதத்தை நீர் மறந்துவிடுவீர்.) அல்லாஹ் பொய்யை அழித்து விடுவான்; தனது கட்டளைகளைக் கொண்டு சத்தியத்தை உறுதிப்படுத்துவான். நிச்சயமாக அவன் நெஞ்சங்களில் உள்ளதை நன்கறிந்தவன் ஆவான்.
الترجمة التاميلية - عمر شريف