17. எவர்கள் நேரான வழியில் செல்கிறார்களோ (அவர்கள் இந்த வேதத்தை கவனத்துடன், பின்பற்றும் எண்ணத்துடன் செவியுறுவதன் காரணமாக) அவர்களுடைய நேர்வழியை (மேலும்) அதிகப்படுத்தி இறையச்சத்தையும் அவர்களுக்கு (அல்லாஹ்) அளிக்கிறான்.
الترجمة التاميلية
وَٱلَّذِينَ ٱهۡتَدَوۡاْ زَادَهُمۡ هُدٗى وَءَاتَىٰهُمۡ تَقۡوَىٰهُمۡ
மேலும், எவர்கள் நேர்வழியில் செல்கிறார்களோ, அவர்களுடை நேர்வழியை (இன்னும்) அதிகப்படுத்தி, அவர்களுக்கு தக்வாவை - பயபக்தியை (இறைவன்) அளிக்கின்றான்.
Jan Trust Foundation - Tamil translation
எவர்கள் நேர்வழி பெற்றார்களோ அவர்களுக்கு (அல்லாஹ்) நேர்வழியை அதிகப்படுத்துவான். இன்னும், அவர்களுக்கு அவர்களின் தக்வாவையும் (-உள்ளச்சத்தையும்) அவன் வழங்குவான்.
الترجمة التاميلية - عمر شريف