4. (நம்பிக்கையாளர்களே! உங்களை எதிர்த்து போர் புரியும்) நிராகரிப்பவர்களை நீங்கள் சந்திப்பீர்களாயின், (தயக்கமின்றி) அவர்களுடைய கழுத்துகளை வெட்டுங்கள். அவர்களை முறியடித்து விட்டால், (மிஞ்சியவர்களைச் சிறை) பிடித்துக் கட்டுங்கள். அதன் பின்னர், அவர்களிடம் ஒரு ஈடுபெற்று அல்லது (ஈடின்றி அவர்கள் மீது) கருணையாக விட்டு விடுங்கள். இவ்வாறு, (எதிரிகள்) தம் ஆயுதத்தைக் கீழே வைக்கும்வரை (போர் செய்யுங்கள்). இது அல்லாஹ்(வின் கட்டளை. அவன்) நாடியிருந்தால், (அவர்கள் உங்களுடன் போர்புரிய வருவதற்கு முன்னதாகவே) அவர்களை பழிவாங்கியிருப்பான். ஆயினும், (போரின் மூலம்) உங்களில் சிலரை, சிலரைக் கொண்டு சோதிக்கிறான். ஆகவே, அல்லாஹ்வுடைய பாதையில் எவர்கள் வெட்டப்பட்டு (இறந்து) விடுகிறார்களோ, அவர்களுடைய நன்மைகளை அவன் வீணாக்கிவிட மாட்டான். (தக்க கூலியையே கொடுப்பான்.)
الترجمة التاميلية
فَإِذَا لَقِيتُمُ ٱلَّذِينَ كَفَرُواْ فَضَرۡبَ ٱلرِّقَابِ حَتَّىٰٓ إِذَآ أَثۡخَنتُمُوهُمۡ فَشُدُّواْ ٱلۡوَثَاقَ فَإِمَّا مَنَّۢا بَعۡدُ وَإِمَّا فِدَآءً حَتَّىٰ تَضَعَ ٱلۡحَرۡبُ أَوۡزَارَهَاۚ ذَٰلِكَۖ وَلَوۡ يَشَآءُ ٱللَّهُ لَٱنتَصَرَ مِنۡهُمۡ وَلَٰكِن لِّيَبۡلُوَاْ بَعۡضَكُم بِبَعۡضٖۗ وَٱلَّذِينَ قُتِلُواْ فِي سَبِيلِ ٱللَّهِ فَلَن يُضِلَّ أَعۡمَٰلَهُمۡ
(முஃமின்களே! வலிந்து உங்களுடன் போரிட வரும்) நிராகரிப்பவர்களை நீங்கள் (போரில்) சந்திப்பீர்களாயின், அவர்களுடைய கழுத்துகளை வெட்டுங்கள்; கடும் போர் செய்து (நீங்கள் அவர்களை வென்று) விட்டால் (அவர்களுடைய) கட்டுகளை பலப்படுத்தி விடுங்கள்; அதன் பிறகு யாதொரு ஈடுபெற்றோ அல்லது (ஈடு பெறாது) உபகாரமாகவோ அவர்களை விட்டு விடுங்கள். போர்(ப் பகைவர்கள்) தங்கள் ஆயுதங்களைக் கீழே வைக்கும் வரையில (இவ்வாறு செய்யுங்கள்) இது (இறை கட்டளையாகும்) அல்லாஹ் நாடியிருந்தால் (போரின்றி அவனே) அவர்களிடம் பழிவாங்கியிருப்பான்; ஆயினும், (போரின் மூலம்) அவன் உங்களில் சிலரை, சிலரைக் கொண்டு சோதிக்கின்றான்; ஆகவே, அல்லாஹ்வின் பாதையில், யார் கொல்லப்படுகிறார்களோ அவர்களுடைய (நற்) செயல்களை அவன் பயனற்றுப் போகுமாறு செய்யமாட்டான்.
Jan Trust Foundation - Tamil translation
நீங்கள் (உங்கள் எதிரி நாட்டில் இருந்து உங்களிடம் போர் செய்ய வருகின்ற) நிராகரித்தவர்களை (போர்க்களத்தில்) சந்தித்தால் (அவர்களின்) பிடரிகளை வெட்டுங்கள்! இறுதியாக, நீங்கள் அவர்களை மிகைத்துவிட்டால், (அவர்களை கைது செய்து) கயிறுகளில் உறுதியாகக் கட்டுங்கள்! ஆக, அதற்குப் பின்னர் ஒன்று, (அவர்கள் மீது நீங்கள்) உபகாரம் புரியுங்கள்! அல்லது, (அவர்கள் உங்களிடம்) பிணைத்தொகை கொடு(த்து தங்களை விடுவி)க் கட்டும்! இறுதியாக, போர் அதன் சுமைகளை முடிக்கின்ற வரை. (அதாவது இறுதி காலத்தில் ஈஸா நபி இறங்கி வந்த பின்னர், நிராகரிப்பாளர்கள் எல்லோரும் இஸ்லாமை ஏற்கின்றவரை அவர்களிடம் போர் செய்யும் போது இதே சட்டங்களை பின்பற்றுங்கள்!) இதுதான் (உண்மையாகும்). அல்லாஹ் நாடினால் (உங்களுக்கும் அவர்களுக்கும் போர் நடக்காமலேயே) அவன் அவர்களிடம் (இவ்வுலகிலேயே விரைவான தண்டனையைக் கொண்டு) பழிதீர்த்திருப்பான். என்றாலும், உங்களில் சிலரை சிலர் மூலமாக அவன் சோதிப்பதற்காக (அவன் இவ்வாறு செய்தான். உங்களில் போர் செய்து, அதில் பொறுமையாக இருப்பவர்கள் யார் என்று சோதிப்பதற்கும், உங்களால் கொல்லப்பட்டவர்களைக் கொண்டு எஞ்சிய நிராகரிப்பாளர்கள் படிப்பினைப் பெற்று இஸ்லாமை ஏற்கவேண்டும், அல்லது பணிந்து போர் செய்யாமல் இருக்க வேண்டும் என்பதற்காக அல்லாஹ் இவ்வாறு செய்தான்.) எவர்கள் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டார்களோ அவர்களின் அமல்களை அல்லாஹ் வீணாக்கிவிட மாட்டான்.
الترجمة التاميلية - عمر شريف