21. அவர்கள் தேகத்தின் மேல் மெல்லிய பசும் பட்டாடையோ அல்லது தடிப்பான (பல நிற) பட்டாடையோ இருக்கும். (விருதாக) வெள்ளிக் காப்பும் அவர்களுக்கு அணிவிக்கப்படும். பரிசுத்தமான ஒரு பானத்தையும் அவர்களின் இறைவன் அவர்களுக்குப் புகட்டுவான்.
الترجمة التاميلية
عَٰلِيَهُمۡ ثِيَابُ سُندُسٍ خُضۡرٞ وَإِسۡتَبۡرَقٞۖ وَحُلُّوٓاْ أَسَاوِرَ مِن فِضَّةٖ وَسَقَىٰهُمۡ رَبُّهُمۡ شَرَابٗا طَهُورًا
அவர்களின் மீது ஸுன்துஸு, இஸ்தப்ரக் போன்ற பச்சை நிற பூம்பட்டாடைகள் இருக்கும்; இன்னும் அவர்கள் வெள்ளியாலாகிய கடகங்கள் அணிவிக்கப்பட்டிருப்பர், அன்றியும், அவர்களுடைய இறைவன் அவர்களுக்குப் பரிசுத்தமான பானமும் புகட்டுவான்.
Jan Trust Foundation - Tamil translation
அவர்களுக்கு மேல் (உள் புறம்) பச்சை நிற மென்மையான பட்டும் (வெளி புறம்) தடிப்பான பட்டு ஆடைகளும் இருக்கும். இன்னும் வெள்ளியினால் செய்யப்பட்ட காப்புகளால் அலங்கரிக்கப்படுவார்கள். அவர்களின் இறைவன் அவர்களுக்கு மிகத் தூய்மையான பானத்தை புகட்டுவான்.
الترجمة التاميلية - عمر شريف