ترجمة سورة الجمعة

الترجمة التاميلية - عمر شريف
ترجمة معاني سورة الجمعة باللغة التاميلية من كتاب الترجمة التاميلية - عمر شريف .

நயவஞ்சகர்கள் உம்மிடம் வந்தால், “நிச்சயமாக நீர் அல்லாஹ்வின் தூதர்தான் என்று நாங்கள் சாட்சி பகருகிறோம்” என்று கூறுவார்கள். நிச்சயமாக நீர் அவனது தூதர்தான் என்று அல்லாஹ் நன்கறிவான். நிச்சயமாக நயவஞ்சகர்கள் பொய்யர்கள்தான் என்று அல்லாஹ் சாட்சி பகருகின்றான்.
அவன்தான் உம்மி (-எழுதப் படிக்கக் கற்காத அரபு வமிசத்தை சேர்ந்த மக்க)ளில் அவர்களில் இருந்தே ஒரு தூதரை அனுப்பினான். அவர்களுக்கு முன் அவனது வசனங்களை அவர் ஓதுகிறார்; அவர்களை பரிசுத்தப்படுத்துகிறார்; அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்பிக்கிறார். இதற்கு முன்னர் நிச்சயமாக அவர்கள் தெளிவான வழிகேட்டில்தான் இருந்தனர்.
இன்னும் அவர்களில் வேறு மக்களுக்காகவும் (அவன் அவர்களை அனுப்பினான்). அவர்கள் (இது வரை) இவர்களுடன் வந்து சேரவில்லை. (அவர்கள் பிற்காலத்தில் வருவார்கள்.) அவன்தான் மிகைத்தவன், மகா ஞானவான்.
இது அல்லாஹ்வின் சிறப்பாகும். தான் நாடுகின்றவர்களுக்கு அவன் அதை கொடுக்கின்றான். அல்லாஹ் மகத்தான சிறப்புடையவன்.
தவ்ராத்தின் படி அமல் செய்ய வேண்டும் என்று பணிக்கப்பட்டு பிறகு, அதன்படி அமல் செய்யாதவர்களின் உதாரணம் கழுதையின் உதாரணத்தைப் போலாகும். அது பல நூல்களை (தன் முதுகின் மீது) சுமக்கிறது. (ஆனால் அவற்றின் மூலம் அதற்கு எந்த நன்மையும் இல்லை. அவ்வாறே தவ்ராத் இவர்களுக்கு கொடுக்கப்பட்டும் அதன்படி இவர்கள் அமல் செய்யாததால் இவர்களும் எந்த நன்மையும் அடைய மாட்டார்கள்.) அல்லாஹ்வின் வசனங்களை பொய்ப்பித்த மக்களின் உதாரணம் மிகக் கெட்டது. அல்லாஹ் அநியாயக்கார மக்களை நேர்வழி செலுத்த மாட்டான்.
(நபியே!) கூறுவீராக! யூதர்களே! நிச்சயமாக நீங்கள்தான் அல்லாஹ்வின் நண்பர்கள் மற்ற மக்கள் அல்ல, என்று நீங்கள் பிதற்றினால் நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாக இருந்தால் மரணத்தை ஆசைப்படுங்கள்!
அவர்களின் கரங்கள் முற்படுத்தியவற்றின் காரணமாக ஒரு போதும் அதை அவர்கள் ஆசைப்பட மாட்டார்கள். அல்லாஹ் அநியாயக்காரர்களை நன்கறிந்தவன் ஆவான்.
(நபியே!) கூறுவீராக! நிச்சயமாக நீங்கள் அதை விட்டு விரண்டு ஓடுகின்ற அந்த மரணம் நிச்சயமாக அது உங்களை சந்திக்கும். பிறகு, நீங்கள் மறைவானவற்றையும் வெளிப்படையானவற்றையும் அறிந்தவன் பக்கம் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள். நீங்கள் செய்துகொண்டிருந்தவற்றை அவன் உங்களுக்கு (அப்போது) அறிவிப்பான்.
நம்பிக்கையாளர்களே! ஜுமுஆ தினத்தன்று தொழுகைக்காக அழைக்கப் பட்டால் அல்லாஹ்வின் நினைவின் பக்கம் நீங்கள் விரையுங்கள்! வியாபாரத்தை விட்டு விடுங்கள்! நீங்கள் (அதன் நன்மையை) அறிகின்றவர்களாக இருந்தால் அதுதான் உங்களுக்கு மிகச் சிறந்ததாகும்.
தொழுகை முடிந்துவிட்டால் பூமியில் பரவி செல்லுங்கள்! அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள்! நீங்கள் அல்லாஹ்வை அதிகம் நினைவு கூருங்கள்! நீங்கள் வெற்றி அடைவீர்கள்.
(முஸ்லிம்களில் சிலர் இருக்கின்றனர்) அவர்கள் ஒரு வர்த்தகத்தையோ ஒரு வேடிக்கையையோ பார்த்தால் அதன் பக்கம் அவர்கள் பிரிந்து சென்று விடுவார்கள், உம்மை (நீர் மிம்பரில்) நின்றவராக (இருந்து பிரசங்கம் நிகழ்த்துகின்ற நிலையிலேயே) விட்டு(விட்டு ஓடி) விடுவார்கள். (நபியே!) கூறுவீராக! அல்லாஹ்விடம் உள்ளதுதான் வேடிக்கையை விடவும் வர்த்தகத்தை விடவும் மிகச் சிறந்ததாகும். அல்லாஹ்தான் உணவளிப்பவர்களில் மிகச் சிறந்தவன் ஆவான்.
Icon