سورة الفاتحة

الترجمة التاميلية

الترجمة التاميلية இலிருந்து التاميلية மொழியில் சூரா الفاتحة இன் மொழிபெயர்ப்பு

الترجمة التاميلية

الناشر

مجمع الملك فهد

Verse 1
1. அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (ஓதுகிறேன்)
Verse 2
2. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! (அவன்தான்) அகிலத்தார் அனைவரையும் படைத்து வளர்த்து தகுந்த முறையில் பக்குவப்படுத்துபவன்.
Verse 3
3. (அவன்தான்) அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையவன்,
Verse 4
4. தீர்ப்பு நாளின் அதிபதி(யும் அவனே).
Verse 5
5. (அல்லாஹ்வே!) நாங்கள் உன்னையே வணங்குகிறோம்; உன்னிடமே உதவி தேடுகிறோம்.
Verse 6
6. நீ எங்களை நேரான வழியில் நடத்துவாயாக!
7. (அவ்வழி) எவர்களுக்கு நீ அருள் புரிந்தாயோ அவர்கள் (சென்ற) வழி.(உன்) கோபத்திற்குள்ளானவர்களோ வழிதவறியவர்களோ சென்ற வழியல்ல.
تقدم القراءة