سورة الفاتحة

Jan Trust Foundation - Tamil translation

Jan Trust Foundation - Tamil translation இலிருந்து التاميلية மொழியில் சூரா الفاتحة இன் மொழிபெயர்ப்பு

Jan Trust Foundation - Tamil translation

Verse 1


அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்! (தொடங்குகிறேன்).
Verse 2

அனைத்துப்புகழும், அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.
Verse 3

(அவன்) அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்.
Verse 4

(அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி(யும் ஆவான்).
Verse 5

(இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
Verse 6

நீ எங்களை நேர் வழியில் நடத்துவாயாக!

(அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி, (அது) உன் கோபத்துக்கு ஆளானோர் வழியுமல்ல, நெறி தவறியோர் வழியுமல்ல.
تقدم القراءة