Jan Trust Foundation - Tamil translation இலிருந்து التاميلية மொழியில் சூரா الهمزة இன் மொழிபெயர்ப்பு
Verse 1
ﭢﭣﭤﭥ
ﭦ
குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான்.
Verse 2
ﭧﭨﭩﭪ
ﭫ
(அத்தகையவன் செல்வமே சாசுவதமென எண்ணிப்) பொருளைச் சேகரித்து எண்ணிக் கொண்டே இருக்கின்றான்.
Verse 3
ﭬﭭﭮﭯ
ﭰ
நிச்சயமாகத், தன் பொருள் தன்னை (உலகில் நித்தியனாக) என்றும் நிலைத்திருக்கச் செய்யுமென்று அவன் எண்ணுகிறான்.
Verse 4
ﭱﭲﭳﭴﭵ
ﭶ
அப்படியல்ல, நிச்சயமாக அவன் ஹுதமாவில் எறியப்படுவான்.
Verse 5
ﭷﭸﭹﭺ
ﭻ
ஹுதமா என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது?
Verse 6
ﭼﭽﭾ
ﭿ
அது எரிந்து கொண்டிருக்கும் அல்லாஹ்வின் நெருப்பாகும்.
Verse 7
ﮀﮁﮂﮃ
ﮄ
அது (உடலில் பட்டதும்) இருதயங்களில் பாயும்.
Verse 8
ﮅﮆﮇ
ﮈ
நிச்சயமாக அது அவர்களைச் சூழ்ந்து மூட்டப்படும்.
Verse 9
ﮉﮊﮋ
ﮌ
நீண்ட கம்பங்களில் (அவர்கள் கட்டப்பட்டவர்களாக).
تقدم القراءة