سورة الضحى

Jan Trust Foundation - Tamil translation

Jan Trust Foundation - Tamil translation இலிருந்து التاميلية மொழியில் சூரா الضحى இன் மொழிபெயர்ப்பு

Jan Trust Foundation - Tamil translation

Verse 1


முற்பகல் மீது சத்தியமாக
Verse 2

ஒடுங்கிக் கொள்ளும் இரவின் மீது சத்தியமாக-

உம்முடைய இறைவன் உம்மைக் கை விடவுமில்லை; அவன் (உம்மை) வெறுக்கவுமில்லை.

மேலும் பிந்தியது (மறுமை) முந்தியதை (இம்மையை) விட உமக்கு மேலானதாகும்.
Verse 5

இன்னும், உம்முடைய இறைவன் வெகு சீக்கிரம் உமக்கு (உயர் பதவிகளைக்) கொடுப்பான்; அப்பொழுது நீர் திருப்தியடைவீர்.
Verse 6

(நபியே!) அவன் உம்மை அநாதையாகக் கண்டு, அப்பால் (உமக்குப்) புகலிடமளிக்கவில்லையா?
Verse 7

இன்னும், உம்மை வழியற்றவராகக் கண்டு அவன், (உம்மை) நேர்வழியில் செலுத்தினான்.
Verse 8

மேலும், அவன் உம்மைத் தேவையுடையவராகக்கண்டு, (உம்மைச் செல்வத்தால்) தேவையில்லாதவராக்கினான்.
Verse 9

எனவே, நீர் அநாதையைக் கடிந்து கொள்ளாதீர்.
Verse 10

யாசிப்போரை விரட்டாதீர்.
Verse 11

மேலும், உம்முடைய இறைவனின் அருட்கொடையைப் பற்றி (பிறருக்கு) அறிவித்துக் கொண்டிருப்பீராக.
تقدم القراءة