سورة العاديات

Jan Trust Foundation - Tamil translation

Jan Trust Foundation - Tamil translation இலிருந்து التاميلية மொழியில் சூரா العاديات இன் மொழிபெயர்ப்பு

Jan Trust Foundation - Tamil translation

Verse 1


மூச்சுத்திணற விரைந்து ஓடுபவற்றின் (குதிரைகள்) மீது சத்தியமாக-
Verse 2

பின்னர், (குளம்பை) அடித்து நெருப்புப் பறக்கச் செய்பவற்றின் மீதும்,
Verse 3

பின்னர், அதிகாலையில் விரைந்து (எதிரிகள் மீது) பாய்ந்து செல்பவற்றின் மீதும்-
Verse 4

மேலும், அதனால் புழுதியைக் கிளப்புகின்றவற்றின் மீதும்,
Verse 5

அப்பால் (பகைப்படையின்) மத்தியில் கூட்டமாக நுழைந்து செல்பவற்றின் மீதும் சத்தியமாக-
Verse 6

நிச்சயமாக, மனிதன் தன் இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கின்றான்.
Verse 7

அன்றியும், நிச்சயமாக அவனே இதற்குச் சாட்சியாகவும் இருக்கின்றான்.
Verse 8

இன்னும், நிச்சயமாக அவன் பொருளை நேசிப்பதில் அளவு கடந்தே இருக்கின்றான்.

அவன் அறிந்து கொள்ளவில்லையா? கப்றுகளிலிருந்து, அவற்றிலிருப்பவை எழுப்பப்படும் போது-
Verse 10

மேலும், இதயங்களில் உள்ளவை வெளியாக்கப்படும் போது-

நிச்சயமாக, அவர்களுடைய இறைவன் அவர்களைப்பற்றி, அந்நாளில் நன்கறிந்தவன்.
تقدم القراءة