49. மனிதனை ஏதும் தீங்கு அணுகும் சமயத்தில், (அதை நீக்கும்படி) நம்மிடமே அவன் பிரார்த்தனை செய்கிறான். (அதை நீக்கி) அவனுக்கு நாம் ஒரு அருள் புரிந்தாலோ, ‘‘தான் அதை அடைந்ததெல்லாம் தன் அறிவின் சாமர்த்தியத்தால்தான்'' என்று கூறுகிறான். (அது சரி) அல்ல; அதுவும் (அவர்களுக்கு) ஒரு சோதனையாகும். ஆயினும், அவர்களில் அதிகமானோர் இதை அறிந்து கொள்வதில்லை.
الترجمة التاميلية
فَإِذَا مَسَّ ٱلۡإِنسَٰنَ ضُرّٞ دَعَانَا ثُمَّ إِذَا خَوَّلۡنَٰهُ نِعۡمَةٗ مِّنَّا قَالَ إِنَّمَآ أُوتِيتُهُۥ عَلَىٰ عِلۡمِۭۚ بَلۡ هِيَ فِتۡنَةٞ وَلَٰكِنَّ أَكۡثَرَهُمۡ لَا يَعۡلَمُونَ
மனிதனை ஏதேனும் ஒரு துன்பம் தீண்டுமானால் அவன் நம்மையே (பிரார்த்தித்து) அழைக்கிறான்; பிறகு, நம்மிடமிருந்து அவனுக்கு ஒரு பாக்கியத்தைக் கொடுத்தோமானால்; அவன்; "இது எனக்குக் கொடுக்கப்பட்டதெல்லாம், என் அறிவின் காரணமாகத்தான்!" என்று கூறுகின்றான். அப்படியல்ல! இது ஒரு சோதனையே - ஆனால் அவர்களில் பெரும் பாலோர் (இதை) அறியமாட்டார்கள்.
Jan Trust Foundation - Tamil translation
மனிதனுக்கு ஒரு தீங்கு ஏற்பட்டால் அவன் நம்மிடம் பிரார்த்திக்கின்றான். பிறகு, நாம் அவனுக்கு நம்மிடமிருந்து ஒரு அருட்கொடையை வழங்கினால், அவன் கூறுகிறான்: “ இது எனக்கு கொடுக்கப்பட்டதெல்லாம் (என்னை அதற்கு தகுதி உள்ளவனாக அல்லாஹ்) அறிந்ததினால்தான். மாறாக, அது ஒரு சோதனையாகும். என்றாலும், அவர்களில் அதிகமானவர்கள் (தங்களுக்கு இறைவன் ஏன் இந்த செல்வத்தைக் கொடுத்தான் என்று) அறியமாட்டார்கள்.
الترجمة التاميلية - عمر شريف