73. எவர்கள் தங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொண்டிருந்தார்களோ அவர்கள் (அந்நாளில்) கூட்டம் கூட்டமாகச் சொர்க்கத்தின் பக்கம் அழைத்து வரப்படுவார்கள். அதன் சமீபமாக அவர்கள் வரும் சமயத்தில், அதன் வாயில்கள் திறக்கப்பட்டு, அதன் காவலாளர்கள் அவர்களை நோக்கி, ‘‘உங்கள் மீது ஸலாம் உண்டாவதாகுக! நீங்கள் பாக்கியவான்களாகி விட்டீர்கள். நீங்கள் இதில் நுழைந்து, என்றென்றும் இதில் தங்கிவிடுங்கள்'' என்று கூறுவார்கள்.
الترجمة التاميلية
وَسِيقَ ٱلَّذِينَ ٱتَّقَوۡاْ رَبَّهُمۡ إِلَى ٱلۡجَنَّةِ زُمَرًاۖ حَتَّىٰٓ إِذَا جَآءُوهَا وَفُتِحَتۡ أَبۡوَٰبُهَا وَقَالَ لَهُمۡ خَزَنَتُهَا سَلَٰمٌ عَلَيۡكُمۡ طِبۡتُمۡ فَٱدۡخُلُوهَا خَٰلِدِينَ
எவர் தம் இறைவனுக்கு பயபக்தியுடன் நடந்து கொண்டார்களோ அவர்கள் கூட்டங்கூட்டமாக சுவர்க்கத்தின்பால் கொண்டு வரப்படுவார்கள்; அங்கு அவர்கள் வந்ததும், அதன் வாசல்கள் திறக்கப்படும்; அதன் காவலர்கள் அவர்களை நோக்கி "உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும், நீங்கள் மணம் பெற்றவர்கள்; எனவே அதில் பிரவேசியுங்கள்; என்றென்றும் அதில் தங்கிவிடுங்கள்" (என்று அவர்களிடம் கூறப்படும்).
Jan Trust Foundation - Tamil translation
தங்கள் இறைவனை அஞ்சியவர்களை கூட்டம் கூட்டமாக சொர்க்கத்திற்கு கொண்டு வரப்படுவார்கள். இறுதியாக அவர்கள் அதற்கருகில் வரும்போது அவர்களுக்கு (உள்ளே நுழைவதற்கு அனுமதி வழங்கப்படும். இன்னும்) அதன் வாசல்கள் திறக்கப்படும். அதன் காவலாளிகள் கூறுவார்கள்: “உங்களுக்கு ஈடேற்றம் உண்டாகட்டும். நீங்கள் நல்லவர்களாக இருந்தீர்கள். ஆகவே, இ(ந்த சொர்க்கத்)தில் நிரந்தரமானவர்களாக நுழைந்து விடுங்கள்!
الترجمة التاميلية - عمر شريف