25. நாம் அவர்களுக்கு, இணைபிரியாத (சில கெட்ட) தோழர்களை இணைத்து விட்டோம். அவர்கள், அவர்களுக்கு முன்னும் பின்னுமுள்ள (தீய காரியங்கள்) அனைத்தையும் அவர்களுக்கு அழகாகக் காண்பித்து விட்டார்கள். ஆகவே, இவர்கள் மீதும், இவர்களுக்கு முன்சென்ற (இவர்களைப் போன்ற பல) மனித, ஜின் கூட்டத்தினர் மீதும் (அவர்கள் தண்டனைக்குள்ளாவார்கள் என்ற) நம் வாக்கு உறுதியாகிவிட்டது. நிச்சயமாக இவர்கள் (அனைவரும்) நஷ்டமடைந்து விட்டனர்.
الترجمة التاميلية
۞وَقَيَّضۡنَا لَهُمۡ قُرَنَآءَ فَزَيَّنُواْ لَهُم مَّا بَيۡنَ أَيۡدِيهِمۡ وَمَا خَلۡفَهُمۡ وَحَقَّ عَلَيۡهِمُ ٱلۡقَوۡلُ فِيٓ أُمَمٖ قَدۡ خَلَتۡ مِن قَبۡلِهِم مِّنَ ٱلۡجِنِّ وَٱلۡإِنسِۖ إِنَّهُمۡ كَانُواْ خَٰسِرِينَ
நாம் அவர்களுக்கு (தீய) கூட்டாளிகளை இணைத்து விட்டோம் ஆகவே, (அத்தீய கூட்டாளிகள்) அவர்களுக்கு, முன்னாலிருப்பதையும் பின்னாலிருப்பதையும் அழகாக்கிக் காண்பித்தார்கள் அன்றியும் அவர்களுக்கு முன்னே சென்று போன ஜின்களும் மனிதர்களுமாகிய சமுதாயத்தார் மீது நம்வாக்கு உறுதியாககிவிட்டது - நிச்சயமாக அவர்கள் நஷ்டவாளிகளாயினர்.
Jan Trust Foundation - Tamil translation
அவர்களுக்கு சில நண்பர்களை நாம் இலகுவாக்கி அமைத்து கொடுத்தோம். அவர்கள் (-அந்த நண்பர்கள்) அவர்களுக்கு (அந்த பாவிகளான நிராகரிப்பாளர்களுக்கு) முன்னுள்ளதையும் அவர்களுக்கு பின்னுள்ளதையும் அலங்கரித்துக் காட்டினார்கள். இவர்களுக்கு முன்னர் சென்றுவிட்ட ஜின்களில் மற்றும் மனிதர்களில் உள்ள (பாவிகளான) சமுதாயங்களுக்கு விதிக்கப்பட்ட அதே விதி (-அதே தண்டனை) இவர்கள் மீதும் உறுதியாகிவிட்டது. நிச்சயமாக இவர்கள் நஷ்டவாளிகளாக இருக்கின்றனர்.
الترجمة التاميلية - عمر شريف