48. (நபியே! இவ்வளவு விவரித்துக் கூறிய பின்னரும்) அவர்கள் (உம்மைப்) புறக்கணித்து விட்டால், (அதைப்பற்றி நீர் கவலைப்படாதீர். ஏனென்றால்,) அவர்களைப் பாதுகாப்பவராக நாம் உம்மை அனுப்பவில்லை. (அவர்களுக்கு நம் தூதை) எடுத்துரைப்பதைத் தவிர (வேறொன்றும்) உம் மீது கடமை அல்ல. நம் அருளை மனிதன் சுவைக்கும்படி செய்தால், அதைப் பற்றி அவன் சந்தோஷப்படுகிறான். அவனுடைய கரங்கள் தேடிக் கொண்ட (தீய) செயலின் காரணமாக அவனுக்கொரு தீங்கு ஏற்பட்டால் நிச்சயமாக மனிதன் நன்றி கெட்டவனாகி (இறைவனையே எதிர்க்க ஆயத்தமாகி) விடுகிறான்.
الترجمة التاميلية
فَإِنۡ أَعۡرَضُواْ فَمَآ أَرۡسَلۡنَٰكَ عَلَيۡهِمۡ حَفِيظًاۖ إِنۡ عَلَيۡكَ إِلَّا ٱلۡبَلَٰغُۗ وَإِنَّآ إِذَآ أَذَقۡنَا ٱلۡإِنسَٰنَ مِنَّا رَحۡمَةٗ فَرِحَ بِهَاۖ وَإِن تُصِبۡهُمۡ سَيِّئَةُۢ بِمَا قَدَّمَتۡ أَيۡدِيهِمۡ فَإِنَّ ٱلۡإِنسَٰنَ كَفُورٞ
எனினும் (நபியே!) அவர்கள் புறக்கணித்து விட்டால் (நீர் கவலையுறாதீர்); நாம் உம்மை அவர்கள் மீது பாதுகாவலராக அனுப்பவில்லை (தூதுச் செய்தியை எடுத்துக் கூறி) எத்திவைப்பது தான் உம்மீது கடமையாகும்; இன்னும், நிச்சயமாக நம்முடைய ரஹ்மத்தை - நல்லருளை மனிதர்கள் சுவைக்கும்படிச் செய்தால், அது கண்டு அவர்கள் மகிழ்கிறார்கள்; ஆனால் அவர்களுடைய கைகள் முற்படுத்தியுள்ள (பாவத்தின காரணத்)தால் அவர்களுக்குத் தீங்கு நேரிட்டால் - நிச்சயமாக மனிதன் நன்றி கெட்டு மாறு செய்பவனாக இருக்கின்றான்.
Jan Trust Foundation - Tamil translation
அவர்கள் (உம்மையும் உமது மார்க்கத்தையும்) புறக்கணித்தால் (அதைப் பற்றி நபியே! நீர் கவலைப்படாதீர். ஏனெனில்) நாம் உம்மை அவர்கள் மீது கண்காணிப்பவராக அனுப்பவில்லை. (மார்க்கத்தை) எடுத்துரைப்பதைத் தவிர (வேறு ஏதும்) உம்மீது கடமை இல்லை. நிச்சயமாக நாம் மனிதர்களுக்கு நம்மிடமிருந்து ஓர் அருளை சுவைக்க வைத்தால் அதனால் அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். அவர்களுக்கு அவர்களின் கரங்கள் முற்படுத்திய (பாவத்)தால் ஒரு தீங்கு ஏற்பட்டால் (அவர்கள் நிராகரித்து விடுகின்றனர். ஏனெனில்) நிச்சயமாக மனிதன் மிகப்பெரிய நிராகரிப்பாளன் ஆவான்.
الترجمة التاميلية - عمر شريف