104. நிச்சயமாக, அல்லாஹ் தன் அடியார்களின் மன்னிப்புக் கோருதலை அங்கீகரிக்கிறான் என்பதையும், தர்மங்களை அவனே எடுத்துக் கொள்கிறான் என்பதையும், நிச்சயமாக அல்லாஹ் பாவங்களை மன்னித்துக் கருணை காட்டுபவன் என்பதையும் அவர்கள் அறியவில்லையா?
الترجمة التاميلية
أَلَمۡ يَعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ هُوَ يَقۡبَلُ ٱلتَّوۡبَةَ عَنۡ عِبَادِهِۦ وَيَأۡخُذُ ٱلصَّدَقَٰتِ وَأَنَّ ٱللَّهَ هُوَ ٱلتَّوَّابُ ٱلرَّحِيمُ
நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களிடமிருந்து தவ்பாவை - மன்னிப்புக் கோருதலை - ஒப்புக்கொள்கிறான் என்பதையும், (அவர்களுடைய) தர்மங்களை அங்கீகரிக்கிறான் என்பதையும் அவர்கள் அறியவில்லையா? மெய்யாகவே அல்லாஹ் தவ்பாவை ஏற்று அருள் புரிபவன்.
Jan Trust Foundation - Tamil translation
நிச்சயமாக, அல்லாஹ்தான் தன் அடியார்களிடமிருந்து (அவர்கள்) திருந்துவதை (பிழை பொருப்பை) ஏற்கிறான்; தர்மங்களை எடுக்கிறான்; நிச்சயமாக அல்லாஹ்தான் (அடியார்களின் தவ்பாவை) மகா அங்கீகரிப்பவன், பெரும் கருணையாளன் என்பதை அவர்கள் அறியவில்லையா?
الترجمة التاميلية - عمر شريف